நிறுத்தம்



கோவை எக்ஸ்பிரஸ்
நடுவழியில் 20 நிமிடம்
நிறுத்தம்


வேலுார், ஏப். 28–
மர்ம நபர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால், கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது.
சென்னையிலிருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7:45 மணிக்கு வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே முருந்தராயபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது டி 9  முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியிலிருந்து மர்ம நபர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
ரயில் என்ஜின்  டிரைவர் அந்த பெட்டிக்கு வந்த விசாரணை நடத்தியதில், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது யார் என தெரியவில்லை. இதனால் 20 நிமிடம் நடுவழியில் நிறுத்தப்பட்டு ரயில் தாமதமாக சென்றது. காட்பாடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்