பரிசு
🔸 *செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் வடக்கு மண்டல காவல் துறை தலைவர் மரு.K.கண்ணன்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் 03.04.2023 மற்றும் 04.04.2023 ஆகிய இரண்டு நாட்கள் வடக்கு மண்டல காவல்துறையினர் அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகள நடைபெற்றது.*
*இதில் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தையும், இன்சாஸ் (INSAS) ரக துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடத்தையும், பிஸ்டல் (PISTOL) ரக துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டாம் இடத்தையும் வென்றார்.*
*மேலும் வந்தவாசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.N.கார்த்தி அவர்கள் ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் மூன்றாமிடத்தையும் வென்றார்.*
*இதன் தொடர்ச்சியாக பெண் காவலர்களுக்கென நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட திருவண்ணாமலை மாவட்ட பெண் காவல் ஆளிநர்கள் ஐந்து பதக்கங்களை வென்றனர்.*
Comments
Post a Comment