VIT
வி.ஐ.டி பல்கலைக்கழக கணிதத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கணிதப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில். மாணவர்களுக்கு மற்ற பாடங்களை விட கணிதம் பாடம் மிகவும் முக்கியமானதாகும் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் கணிதத்தின் தேவை உள்ளது கணிதம் என்பது ஒரு தொழில்நுட்ப மொழி எனவே கணிதம் இல்லாமல் எதிர்காலம் இல்லை பிரச்சனைகளை தீர்க்கவும் புதுமைகளை படைக்கும் தீர்க்கமான புரிதல் ஏற்படும் கணிதம் அடிப்படையாக உள்ளது என்றார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். டீன் அருணை நம்பிராஜ் வரவேற்றார். கணிதத் துறை தலைவர் ஜெகதீஷ் குமார் போட்டிகள் நடத்தியது குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது; பள்ளி மாணவர்களுக்கு கணிதப் போட்டியை நடத்திய வி.ஐ.டி பல்கலைக்கழகத்தை பாராட்டுகிறேன். அறிவியல், வேதியியல், தாவரவியல் உள்பட பல...