பலி
வேலூர் 29-4-24
ஒடுக்கத்தூர் அருகே நீச்சல் பழகிய போது பரிதாபம்2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் மூழ்கி பலி சோகத்தில் மூழ்கிய கிராமம்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்தஒடுக்கத்தூர் அருகேயுள்ள கரடிகுடி அருகே உள்ள பிச்சநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவரது மனைவி பவித்ரா (30). தம்பதியரின் மகன் ரித்திக் (9), மகள் நித்திகா ஸ்ரீ (7).தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்தனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உளள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக செய்தார். அதன்படி பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றார். நீண்ட நேரம் குளித்துக் கொண்டிருந்தபோது தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கினர். இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த சுரேஷ் அக்கம் பக்கம் வீடுகளில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. உடல்கள் மீட்பு இந்த நிலையில் இன்று விவசாய கிணற்றின் அருகே சிலர் நடந்து சென்றனர்.அப்போது சிறுமி நித்திகா ஸ்ரீ பிணமாக மிதங்கினார். இது குறித்து அந்த பகுதி மக்கள் ஒடுகத்தூர் தீயணைப்பு துறை மற்றும் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர் மாயமான இளம்பெண் மற்றும் சிறுவனும் கிணற்றில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர்.நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பவித்ரா மற்றும் ரித்திக் ஆகியோரின் உடல்களும் மீட்க்கப்பட்டன. இதையடுத்து வேப்பங்குப்பம் போலீசார் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment