அவர் தான் உத்தமர்
தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜர் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது ... அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் :
" அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு ? . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா ?வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , " ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருதுநகர்லயே விட்டு வச்சிருக்கேன் " என்றார்.
Comments
Post a Comment