சிந்து நதி
*💥 சிந்து நதி நீர் வரலாறு! பாகிஸ்தான் பாதிக்கப்படப் போவது எப்படி?*
சிந்துநதி பகிர்வு ஒப்பந்த்தை இந்தியா ரத்து செய்துவிட்டதாக தேசிய அரசு அறிவித்துவிட்டது, இதன் பொருள் இனி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியா தடுக்கும் என்பது
வடமேற்கு இந்தியாவின் செழிப்புக்கும் வழமைக்கும் காரணம் சிந்துநதி, இது தனி நதி அல்ல, காவேரி போல் ஏகபட்ட கிளைநதிகளை கொண்டது, இந்தியா எனும் பெயர் சிந்து எனும் பெயரில் இருந்துதான் உருவானது
சி எனும் பெயர் மேற்கே ஹி என மாறும், ஹிந்து ஹிந்துமதம் என சிந்து நதி கரையின் பெயரால்தான் இந்தியா என்றும் இந்துமதம் என்றும் பெயரே உருவாகி வந்தது
அந்த சிந்து நதி 1947ம் ஆண்டும் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்க்கு சென்றது ஆனால் பாகிஸ்தானுக்கு பெரும் அச்சம் இருந்தது அல்லது பெரும் அச்சத்தை உணர்ந்தார்கள்
,
சிந்துநதி என்பது தனியாக உருவாகி வந்தாலும், ராவி, பியாஸ் சட்ஜெஜ், செனாப், நீலம் அல்லது ஜீலம் எனபல நதிகளின் தொகுப்பு தனியாக சிந்து பெரிய ஆறுதான் ஆனால் மிக பெரியது அல்ல துணையாறுகள் அதன் பலன்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அந்த ஆறுகள் உருவாகும் பகுதி எதுவும் பாகிஸ்தானில் இல்லை எல்லாமே இந்தியாவில் அல்லது காஷ்மீரத்தில் இருந்தன
அதாவது சிந்துநதி மான்சரோவரேறியில் உருவாகி காஷ்மீர் வழியாக வரும் நதி, அதன் துணையாறுகளான நீலம் நதி காஷ்மீரில் இருந்து வருவது, நீல நதிகரையில்தான் அன்று ஆதிசங்கரரெல்லாம் வழிபட்ட நீல சரஸ்வதி சாரதாதேவியின் கோவில் சாரதா பீடமாக இருந்தது
அதன் நீட்சியாக தட்சசீல பல்கலைகழகம் சிந்துநதிகரையில் இருந்தது
இதை அடுத்து ராவி, பியாஸ், செனாப் எல்லாம் இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் உருவாகி வருபவை, சட்லஜ் ஆறு இந்தியாவின் உத்திரகாண்ட் அதாவது கயிலாய மலையில் இருந்து வருவது
ஹிமாலய பகுதிகள் மேற்கு நோக்கி சரிந்திருப்பதால் இவை கிழக்கில் இருந்து மேற்கே செல்லும் நதிகள், மிக மிக செழிப்பான பகுதியாக பஞ்சாப் சிந்து பிரதேசம் மாறவும், அந்த ஆற்றின் முடிவில்தான் ஆசியாவின் சிறந்த துறைமுகமான கராச்சி உண்டு, அமைப்பில் பம்பாயினை விட அதுதான் மிக சிறந்த துறைமுகம்
இப்படி பாகிஸ்தானின் பொருளாதாரமே சிந்துநதியில்தான் உண்டு, பருத்தி , பாசுமதி, கரும்பு, கராச்சி துறைமுகம் என அதுதான் அவர்களின் பலம்
அப்படியான சிந்துவின் நீர் பிடிப்பு மற்றும் வழிகள், நீர் மூலமெல்லாம் இந்தியாவிடம் இருப்பதை கண்டு அப்போதே அஞ்சினார்கள், அவர்கள் முதல் குறி காஷ்மீராக இருந்தது
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
காஷ்மீரத்தை பிடித்தால் சிந்து நீலம் என இரு நதிகள் கிடைக்கும் என கருதித்தான் அங்கு பாய்ந்தார்கள், காஷ்மீருக்கு அவர்கள் ஆசைபட காரணம் பலவாக இருப்பினும் முதல் காரணம் ஆற்றுவளம்
அய்யா நேரு இதை அறிந்துதான் அது அவர்களிடமே செல்லட்டும் என்பது போல் இருந்தார் ஆனால் காஷ்மீர் அரசரும் பட்டேல் போன்றோரும் விடவில்லை , இந்திய ராணுவம் முழு காஷ்மீரை கைபற்றவே சென்றது
ஆனால் நேரு பாதி காஷ்மீர் அவர்களுக்கு என்பதில் சரியாக இருந்தார், ஆனாலும் பெரும்பான்மை மிக்க நீர் ஆதார மூலம் இந்தியாவிடமே இருந்தது
சில பல போர்கள் நடத்தியும் தோற்ற பாகிஸ்தான் பேச்சுவார்த்தை என கையினை நீட்டியது, நேருவும் பற்றி கொண்டார், சுமார் 9 ஆண்டுகாலம் பேசினார்கள்
அய்யா நேருவுக்கு இந்த சிக்கல் தீர்ந்தால் பாகிஸ்தான் பேசாமல் போய்விடுமோ எனும் அச்சம் இருந்தது போலிருக்கின்றது அதனால் ஜின்னா காலத்தில் தொடங்கிய பேச்சு அவர்கள் சர்வாதிகாரி அயூப்கான் காலம் வரை நீண்டது
பின் செப்டம்பர் 19, 1960ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்தார்கள் அதன்படி எல்லா ஆறுகளின் மூலம் இந்தியவாக இருந்தாலும் அது பாகிஸ்தானுக்கு பெருந்தன்மையாக கொடுக்கபட்டது
முதலில் சிந்து ஆறும் அதன் துணை ஆறுகளும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டன. சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றும் மேற்கு பகுதி ஆறுகள் எனவும், பியாஸ், சத்லஜ், ராவி ஆகிய மூன்றும் கிழக்கு பகுதி ஆறுகள் எனவும் பிரிக்கப்பட்டன.
இதன் படி கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த இந்தியாவுக்கு உரிமை வழங்கப்பட்டது. மேற்கு பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த பாகிஸ்தானுக்கு உரிமை வழங்கப்பட்டது, ஆனால் பாகிஸ்தானுக்கு செல்லும் நீரில் மின்சாரம், குடிநீர் என பயன்படுத்த்லாம் அணை ஏதும் கட்டமுடியாது
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அதனால் 90% நீர் அந்த மூன்று ஆறுகளில் இருந்தும் பாகிஸ்தானுக்கே செல்லும்
இங்கே பெரிய கொடுமை என்னவென்றால் நேரு பாகிஸ்தானுக்கு அங்கும் விசுவாசமாக இருந்தார் எந்த அளவு என்றால் நீங்கள் எங்களோடு செய்த ஒப்பந்தத்திற்கு நன்றி என்றும், பெரிய பெரிய அணைகட்டுங்கள் என அள்ளி அள்ளி கொடுத்தார்
ஏன் என்றால் பாகிஸ்தானில் ஆறும் அணையும் இல்லையாம், அது உரிமைகளை விட்டுகொடுத்துவிட்டதாம், நேருவின் பாகிஸ்தான் மோகம் இப்படித்தான் இருந்தது
அதன் பின் எத்தனையோ முறை பெரும் யுத்தம் வந்தும் காங்கிரஸ் அரசு இதை தொடவில்லை, நேரு செய்த திருப்பணிக்கு காவல் இருந்தார்கள்
எவ்வளவோ தொல்லைகளை, பெரும் பெரும் அழிவுகளை பாகிஸ்தான் கொடுத்தபோதும் அவர்களை வாழவைத்து கொண்டிருந்தது இந்தியா
முதல்முறை இதனை கையில் எடுத்தவர் வாஜ்பாய் ஆனால் அவரின் கூட்டணி அரசாங்கத்து திமுக போன்றவை விடுமா? வாஜ்பாயும் பெரிதாக நடவடிக்கை எடுக்கமுடியவில்லை
இப்போது மோடி காலத்தில் உரிய வகையில் இந்தியா அடித்திருக்கின்றது
இப்படி உடனே செய்துவிடவும் முடியாது காரணம் இது உலக விவகாரமாகிவிடும், சில ஒப்பந்தகளை மீற உலக ஆதரவு அவசியம் உரிய காரணமும் அவசியம்
இஸ்ரேல் சிரியாவின் பகுதிகளை பிடித்து இதே நீர் யுத்தம் செய்கின்றது, ஜோர்டான் நதியினை ஒரு ஆயுதமாக கொண்டிருக்கின்றது, துருக்கி யூரடீஸ் டைக்ரீஸ் நதிகளை தடுத்து ஒரு யுத்தம் செய்கின்றது
அரசியலில் ஆயுத மோதல் மட்டுமல்ல, இயற்கை வளமும் ஒரு ஆயுதம் அவ்வகையில் இந்தியா சரியாக நகர்கின்றது
எங்களை வாழவிடாத உங்களை ஏன் வாழவிட வேண்டும் ?, எங்களை நீங்கள் வாழவிட்டால் உங்களை நாங்கள் வாழவிடுவோம்
வாழ்ந்தால் இருவரும் வாழ்வோம், வீழ்ந்தால் நீங்கள் மட்டும் வீழ்ந்து நாசமாய் போங்கள் என்பது ஒரு அரசியல் அதை சரியாக செய்கின்றது மோடி அரசு
இனி காலிகுடத்துடன் பாகிஸ்தான் வரட்டும் , பார்த்து கொள்ளலாம்
இதற்காக பாகிஸ்தான் படையெடுக்க முடியாது வந்தால் அடிவாங்கி வீழும், உலகெல்லாம் "தண்ணி தரல" என கதறினாலும் "நீ செய்ற வேலைக்கு இவ்வளவு நாளும் தந்ததே தப்பு" என்பார்கள்
சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குபதிந்தால் ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலமைதான்
அதனால் ஒன்று அழவேண்டும், இல்லை ஆப்கானுக்கு குடிபெயரவேண்டும் அவர்களும் சேர்க்கமாட்டார்கள்
நிச்சயம் இந்தியா கருணை இல்லா நாடு அல்ல, உரிய உத்திரவாதங்களை கொடுத்து இந்தியாவுக்கு எதிராக ஏதும் செய்யமாட்டோம் என செயலில் காட்டினால் நிச்சயம் உரிய நீரை இந்தியா வழங்கும்
ஆனால் இங்கிருந்து செல்லும் நீரில் வாழ்ந்து துரோகத்தை இங்கே காட்டினால் விடாது
ஆக நேரு செய்த தவறுகளை மோடி சரி செய்துகொண்டிருக்கின்றார், இங்குள்ள ஒரே எதிர்பார்ப்பு மானுடநேயமிக்க இந்திய கட்சிகள் பாகிஸ்தானுக்கு நீர் கொடுங்கள் என கபில்சிபல் தலமையில் உச்சநீதிமன்றம் சென்றாலும் செல்வார்கள் அவர்களின் இந்திய எதிர்ப்பு அப்படியானது
ஆனால் இந்திய நீதிமன்றங்கள் வெளிநாட்டு விவகார ஒப்பந்தங்களில் தலையிட முடியாது, அப்படி வழி உண்டு என்றால் கச்சதீவு மீண்டிருக்கும் இன்னும் பல சிக்கல் தீர்ந்திருக்கும்
Comments
Post a Comment