10% ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு பேட்டி

 

 கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு மோடி அறிவித்துள்ள அறிவிப்பு தங்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர்  வெங்கடசுப்பு அரக்கோணத்தில் பேட்டி....அமெரிக்கா ஈரான் போர் ஏற்பட்ட காரணத்தால் 10 சதவீத உணவகங்கள் மூடப்பட்டுள்ளது....

அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர்  . வெங்கட சுப்பு செய்தியாளர்களை சந்தித்தார்.அமெரிக்கா ஈரான் போர் காரணமாக எரிவாழ்வு சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் 10% உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மற்ற உணவகங்கள் மின் சக்தி மூலமாகவும், விறகு அடுப்பு மூலமாக உணவகங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் உணவகங்கள் நேரம் மாற்றப்பட்டு குறைந்த நேரத்தில் உணவகங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், உணவகங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் பட்டியலில் உள்ள உணவு பண்டங்களை குறைத்து இருப்பதாகவும், மிகுந்த சிரமத்திற்கு இடையே உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்தப் போரை காரணம் காட்டி அனைத்து பொருட்களும் அதிக விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. 100 சதவீதம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அடுப்பு விறகு வாங்குவதும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து இருப்பதாகவும், விறகு உயர்ந்துள்ளது, மின்சாரம் எப்போது உயரம் என தெரியவில்லை, இந்த சூழ்நிலையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே உணவகங்கள் நடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உணவகங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே உணவகங்கள் பொருட்களின் விலையை விற்று வருவதாகவும், விலை ஏற்றம் இருப்பதால் தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.மத்திய அரசிடம் கேஸ் சிலிண்டர் பகிர்ந்து வழங்க வேண்டும் எனவும், வீடுகளுக்கு வழங்குவது போல் முன்னுரிமை உணவகங்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 75% மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசோ 50 சதவீதம் தான் அறிவித்துள்ளது. ஆனால் அந்த 50 சதவீதமும் தற்போது உணவகங்களுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார். மாநில அரசிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தைப் பொறுத்தவரை சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்கள் போன்று இரண்டு ரூபாய் ஒரு யூனிட்டுக்கு குறைக்கவாய்ப்பு இருப்பதாகவும். சூரிய மின் சக்தி மூலமாக மின் உற்பத்தி செல்லும் செய்து கொள்வதற்கு 100% தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தனியாரிடமிருந்து மின்சாரம் பெற்றுக் கொள்வதற்கான வழிவகை செய்ய வேண்டும். அந்த வசதியும் தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர். மத்திய பாஜக அரசு மோடி அவர்கள் மீண்டும் லாக் டவுன் போடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வந்த தகவல் குறித்து கேட்டதற்கு. மிகவும் மிகுந்த பயமாக பார்ப்பதாகவும், நரேந்திர மோடி அதிக அளவு பேச மாட்டார் ஆனால் அவருடைய செயல்பாட்டால் போர் பகுதியில் இருந்து எரிபொருள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த சூழ்நிலையில் அவர் அந்த அறிக்கை அறிவிக்கப்பட்டிருப்பது. அமெரிக்கா ஈரான் போரும் ஐந்து நாட்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த இந்த சூழ்நிலையில் மோடி அறிவிப்பு சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் போரால் எண்ணெய் கிணறுகள் அழிக்கப்பட்டிருப்பதால் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சரி செய்வதற்கு நிலை ஏற்பட்டுள்ள நிலையில் எப்படி சமாளிக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மோடி அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் பல்வேறு வியாபாரிகள் முடங்கிப் போனார்கள் குறித்து கேட்டதற்கு. கொரோனா நோய் தொற்று காலகட்டத்தில் இயற்கையான பேரழிவு ஏற்பட்டது. ஆனால் தற்பொழுது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மூலமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதனால் இந்த சூழ்நிலை ஏற்றவாறு எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கு நாம் முன்வர வேண்டும் உணவகங்கள் மின்சாரம் மற்றும் விறகு அடுப்பு மூலமாகவும் தயாரிப்பதற்கு ஏற்றவாறு தொழிலை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும். எல்பிஜி கேஸ் குறைந்த அளவை பயன்பாட்டிற்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு அறிவித்த மின்சார் யூனிட்டில் இரண்டு ரூபாய் மானியம் குறித்து கேட்டதற்கு. இரண்டு ரூபாய் மானியம் என்பது நாங்கள் கேட்டது வேற அரசு அறிவித்துள்ளது வேறு. அரசு அறிவித்துள்ளது எவ்வளவு மின் பயன்படுத்தப்பட்டுள்ளது அதற்கு மட்டும் இரண்டு ரூபாய் குறைப்பதாக அரசு தெரிவித்துள்ளது. எல்பிஜியை விட மின்சாரத் மூலமாக பயன்படுத்தும் உற்பத்தி என்பது அதிக செலவுக்கு அதிகமாக இருப்பதால் இது ஏற்றுக்கொள்ள இயலாது என தெரிவித்துள்ளார். கேஸ் சிலிண்டர் நிறுவனங்கள் இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி அதிக விலைக்கு சிலிண்டர்களை விற்கப்பட்டு வருவதாகவும் உடனடியாக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளச் சந்தையில் தனியார் நிறுவன கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்வதையும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துள்ளார். எனவே கேஸ் சிலிண்டர் மீது அதிக விலை கொடுத்து விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு உள்ளார்.


Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்