2 பேர் பலி


 

சோளிங்கரில் இளைஞர் இருசக்கர வாகனத்தை போட்டி போட்டு ஓட்டி சென்றதில் இருசக்கர வாகனங்கள் மரத்தில் மோதி இருவர்  பலி  

சோளிங்கர்:
      ராணிப்பேட்டைமாவட்டம்,கட்டாரிக்குப்பத்தை சேர்ந்த சீனிவாசன் என்பரின் மகன் தருன்குமார்(18) இவர்களுடைய நண்பர் நவீன்(25). இவர்கள் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் கட்டாரிகுப்பம் பகுதியில் இருந்து அருண் ஒரு இருசக்கர வாகனத்திலும், தருண்குமார் மற்றும் நவீன் ஆகிய இருவரும் வேறொரு இருசக்கர வாகனத்தில் என இரண்டு இரு சக கர வாகனத்தில் சோளிங்கர் நோக்கி பாணாவரம் சபோளிங்கர் சாலையில் சோளிங்கர் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது இருவரில் யார் முந்தி செல்வது என்ற வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது பாணாவரம் சோளிங்கர் சாலையில் முதல் மன்டபம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த வேப்பமரத்தில் பலமாக மோதியது அதே நேரம் பின் தொடர்ந்து வந்த தருண்குமார் ஓட்டி வந்த வாகனமும் பின் தொடர்ந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மேலும் படுகாயம் அடைந்த தருண்குமார் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தபோது மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தள்ளனர். தாெடர்ந்து அருண், தருண்குமார் இருவர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். இதில் லேசான காயம் அடைந்த நவீன் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து கொண்டபாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடததி வருகின்றனர்

Comments