வேட்புமனு தாக்கல்
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இமலன் வேட்புமனு தாக்கல் செய்தார்
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம், 2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நிலையில் இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில்,குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இமலன் கட்சி நிர்வாகிகளுடன் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வேட்பாளர் உட்பட ஐந்து பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் வேட்பாளர் உடன் வந்த கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது மேலும் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் அதிகாரியும் குடியாத்தம் கோட்டாட்சியருமான சுபலட்சுமி யிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இமலன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
Super
ReplyDelete