பாராட்டு விழா
*பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கணக்கும் இனிக்கும் பயிற்சி நிறைவு* *விழாவில் சான்றி வழங்கி பாராட்டு*
வேலூர்
கணித திருவிழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு வானவில் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.ஆர்.சேதுராமன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினார்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் பெறச் செய்யும் வகையில் கணித திருவிழா கணக்கும் இனிக்கும், கணிதத்தை எளிமையான முறையில் கற்கும் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது, எண்களுடன் விளயாடி மகிழ்வோம், செயல் வழி கற்றல், இயற்கையில் கணிதத்தின் வடிவங்களை ஆராய்தல், கணிதத்தை ஒரு சாகசமாக மாற்ற இயற்கையோடு இயைந்த சூழலில், கணிதத்தை எளிமையாகவும் ஆர்வமாகவும் கற்கும் வகையில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இயற்கை வேளாண் பண்னை இணைந்து கே.வி.குப்பம் ஒன்றியம், காளாம்பட்டு அறிவுத்தோட்டம் வளாகத்தில் நடைபெற்றது.
குழந்தைகள் கணித விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் முத்து சிலுப்பன் அறிவுத்தோட்டத்தின் நிறுவுனர் கு.செந்தமிழ்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
முன்னதாக மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், வரவேற்று பேசினார். நிகழ்வுகளை மாவட்ட பொருளாளர் ஆர்.காயத்ரி ஒருங்கிணைத்து பேசினார்.
ஓய்வு பெற்ற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கோபால ராஜேந்திரன் இணை செயலாளர் பி.சுகுமாறன் மாநில செயற்குழு உறுப்பினர் பே அமுதா, க. பூபாலன், க. பழனிவேல் கே வி குப்பம் கிளைச் செயலாளர் ஆர் வேல்முருகன் காட்பாடி கிளை தலைவர் ஆர்.சுதாகர் யுனிசெப் ஒருங்கிணைப்பாளர் பி ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வானவில் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ் ஆர் சேதுராமன் கணித திருவிழாவினை நிறைவு செய்து பங்கேற்ற மாணவ மாணவிகளுகுக சான்றிதழகள் வழங்கி பேசினார்.
குழந்தைகள் நூல் எழுத்தாளர் செ.விழியன், சிறப்புரையாற்றினர். அறிவுத்தோட்டத்தின் இணை நிறுவனர் எஸ்.குணசுந்தரி, மேலாளர் எம்.சத்தீஷ், வேளாண் பயிற்சியாளர் மாலதி கங்காதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பயிற்சி கருத்தாளர்கள் ஹரிவரசன் சுற்றுச்சூழல் ஆய்வாளர் சிந்தியா கதை சொல்லி இந்தி ராணி கணித எழுத்தாளர் சரண்யா சிறப்பு கல்வி பயிற்றுனர் டாக்டர் ரேவதி உளவியல் ஆலோசகர் சக்தி செண்பகவல்லி கணித கதை சொல்லி வி. வித்யா, ஆர். உதயகுமார் ஆகியோர் கருத்தாளர்களாக செயலாற்றி பயிற்சிகள் அளித்தனர்.
விழா ஒருங்கிணைப்பாளர் பா.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
முதல் நாள் நிகழ்வில் அறிவுத்தோட்டம் சுற்றும் நடைப்பயணம்,கணிதமும் மூளையின் ஆரோக்கியமும், கண்களை மூடி கணித வடிவியல் பயிற்சி, அளவீடுகள் குறித்த கலந்துரையாடல், கணிதப் பேச்சு, கணிதக் கதைகள் கணித பாடல், காலநிலை மாற்ற செயல்பாடுகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இரண்டாம் நாள் பயிற்சி முகாமில் குழுச் செயல்பாடுகள், தென்னை இலையில் கைவினை டாங்கிராம் மந்திரம் புத்தக வெளியீடு, கணித பாடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி முகாமில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ மாணவிகள் 80பேர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் குழந்தைகளும் பங்கேற்றனர். மேலும் அவர்தம் பெற்றோர்கள் 30பேரும் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் கருத்தாளர்கள் நிர்வாகிகள் என 30பேர் என மொத்தம் 150 பேர்பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
இந்த நிகழ்வில் பேரணாம்பட்டு கிளைச் செயலாளர் பொன் வள்ளுவன் சி எஃப் சி எம் பத்மநாபன் வேலூர் இணைச் செயலாளர் சாய் இளவழகன் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் என் எஸ் சாந்தகுமாரி ஆர் ஆலிஸ் மேரி தேவி ஸ்ரீ அறிவுமதி ஜெயலட்சுமி எழில் காட்பாடி கிளை பொருளாளர் எம் ஈஸ்வரி அறிவுத் தோட்டத்தின் காப்பாளர்கள் மகேந்திரன் இளவரசி நிரோஷா ஷீலா மோகன்ராஜ், ருத்ராணி கங்காதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
Comments
Post a Comment