உலக சாதனை விருது பெற்ற சமூக சேவகர் மணிமாறனுக்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு

தமிழகம் முழுவதும் 
3,508 ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்து  
 
உலக சாதனை விருது பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் சமூக சேவகர் மணிமாறன்

புதுச்சேரி முதலமைச்சர் பாராட்டு கடிதம் வழங்கினார்

வேலூர் ஜூன். 4


3508 ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்து உலக சாதனை விருது பெற்ற திருவண்ணாமலை மாவட்ட சமூக சேவகர் மணிமாறன் அதற்கான சாற்றினை புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு என் ரங்கசாமி அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்    
திருவண்ணாமலை அருகே தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தேசிய விருதாளரும், சமூக சேவகருமான மணிமாறன் (வயது 40). இவர் தமிழக முழுவதும் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த முதியோர்களை 25 ஆண்டுகளாக நல்லடக்கம் செய்து வருகிறார் இவர் வேலூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் கடலூர் விழுப்புரம் கிருஷ்ணகிரி திருப்பூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருச்சி மதுரை திண்டுக்கல் பழனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உறவினங்கள் உரிமை கோராத பிணங்களை கேட்டு பெற்று தமிழக முழுவதும் முறைப்படி காவல்துறையின் அனுமதி பெற்று சடலங்களை அடக்கம் செய்து வருகின்றார் உலகில் யாரும்  அனாதைகள் இல்லை பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை அனாதைகளாக விட்டு விடக்கூடாது அவர்களை கடைசி காலத்தில் காப்பாற்றி நீ மா சடங்குகளை செய்ய வேண்டும்  என்பதை வலியுறுத்தி கடந்த 2002 முதல் 2026ம் ஆண்டு வரையில் 3508 ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளார் இச்சேவையை 
தனிமனிதனாக செய்த மணிமாறனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் (யுனிக் வேர்ல்டு ரெக்கார்டு) உலக சாதனையாளர் அங்கீகரித்து சான்று விருது வழங்கியுள்ளது இந்த உலக சாதனை சான்றிதழ் சான்றினை புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு என் ஆர் ரங்கசாமி அவர்களிடம் காண்பித்து சமூக சேவகர் மணிமாறன் நல்லடக்கம் சேவையை வாழ்த்து பெற்றார் அவரை திருவண்ணாமலை வேலூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்