இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்
இங்கு சென்றால்
உடல் நோய்,
மன நோய்
குணமாகும்
இன்றைய வாழ்க்கையில், பணம், பொருள், வீடு, கார் இருந்தால் போதாது. அதற்கு மேலாக உடல் ஆரோக்கியம் இருந்தால் தான் இவற்றையெல்லாம் அனுபவிக்க முடியும்.
உடல் ஆரோக்கியம் பெறவும், மன அமைதி பெற்று வாழவும் வழிபட வேண்டிய கடவுள் தன்வந்திரி பகவான்.
தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோவில் வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே, கீழ்புதுப்பேட்டையில், உள்ளது.
கோவிலின் பெயர் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம். இதை அமைத்தவர் ஸ்ரீமுரளிதர சுவாமிகள்.
இங்கு அழகிய திருக்கோலத்தில் தன்வந்திரி பகவன் காட்சி அளிக்கின்றார். 75 க்கும் மேற்பட்ட சுவாமி சன்னதிகள், 468 சித்தர்கள் சன்னதி உள்ளது.
மூலவர்– தன்வந்திரி பகவான்
தாயார்– ஆரோக்கிய லட்சுமி
உற்சவர்– ஸ்ரீவைத்ய லட்சுமி ஸமேத வைத்தியராஜன்
ஸ்தல விருட்சம்– புன்னை மரம்
தீர்த்தம்–வேகவதி நதி
பிரசாதம்– சுக்கு, வெல்லம், தைலம்
நேர்த்திக்கடன்– சுக்கு, வெல்லம், நல்லெண்ணை, பச்சரிசி, வெண்ணெய், மூலிகை, தேன், நெய் போன்ற பொருட்களினால் தன்வந்திரி பகவானுக்கு அபிேஷகம், யாகம் செய்யலாம்
தல புராணம்– தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, வந்த ஜோதியில் பிறந்தவர் தான் தன்வந்திரி பகவான். கையில் சங்கு, சக்கரம், அட்டைச்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றுடன் தெய்வீக மருத்துவராக காட்சி தந்தவர். மனிதர்களுக்கு அவரவர் கர்ம வினைப்படிதான் நோய்கள் வந்து தீரும். இதில் இருந்து நம்மை காக்கும் ஒரே கடவுள் தன்வந்திரி பகவான் தான். இவரை தரிசித்தால் நோய் நொடிகள் விலகி ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஆனந்தம் கிடைக்கும்.
பீடத்தில் உள்ள கோவில்கள்: குபேர லட்சுமி, கணபதி, பால முருகன், சூரியன், சந்திரன், ரமணர், புத்தர், குருநானக், மகாவீர், சீரடி பாபா என 75 க்கும் மேற்பட்ட சன்னதிகள்
உள்ளது.
தரிசிக்கும் முறை– ஆண்கள் சட்டை, பனியன், லுங்கி, தொப்பி, தலைப்பாகை அணியாமல் வர வேண்டும்.
விருது– சுற்றுச் சூழலுக்காக ஐஎஸ்ஓ 14001– 2004 ம் ஆண்டும், நோய்கள் குணப்படுத்துவதற்காக ஐஎஸ்ஓ 9001– 2008 ம் ஆண்டும் வழங்கப்பட்டது.
சாதனை– 500 க்கும் மேற்பட்ட சண்டி யாகம், சூலினி துர்கா யாகம், 1, 32, 000 மோதகங்களுடன் வாஞ்சா கல் பலதா கணபதி யாகம், 74 குண்டங்களில் 74 பைரவர் ேஹாமம், 6, 000 கிலோ சிகப்பு மிளகாய் வற்றலுடன் மஹா ப்ரத்யங்கிரா தேவி யாகம், 10 ஆயிரம் மாதுளை பழங்களுடன் மஹா காளி யாகம், 365 நாட்களும் 365 ேஹாமங்கள், 15 ஆயிரம் வாழப்பழங்களுடன் மஹா ஆஞ்சநோய ேஹாமம் என நுாற்றுக்கானக்காக ேஹாமம், யாகம் நடந்துள்ளது.
சிறப்பு நிகழ்ச்சி– நவ 28 மகாமந்திர ப்ரதிஷ்டா தினம், நவ 28 முதல் டிச 13 வரை மூலவர் தன்வந்திரிக்கு தைலாபிேஷகம், டிச 14 சுமங்கலி பூஜை, டிச 15 வருஷாபிேஷகம், மே 1 உலக தொழலாளர் நல வேள்வி, ஆக 15 பாரத மாதா பூஜை,
சித்ரா பெளர்ணமியில் 468 சித்தர்களுக்கும் 468 குண்டங்களில் சித்தர்கள் ேஹாமம், ஜன 26 உலக ஜோதிடர் குடும்ப நல வேள்வி
மாதாந்திர நிவாரண பூஜைகள்– அன்னபூரணிக்கு படையல், சாந்தி ேஹாமம், சந்தான கோபால யாகம், கர்தர்வராஜ ேஹாமம், சுயம் வர கலா பார்வதி ேஹாமம், வாஸ்து யாகம்,
வாராந்திர நிவாரண பூஜைகள்
பீடத்தின் பிரசாதம்– அமிர்த கலச தீர்த்தம், மூலிகை ரக்சை, தன்வந்திரி யந்திரம், மூலிகை பஸ்பம், ேஹாம காசு, மந்திர ரக்சை, மாங்கல்ய சரடு, தேன், நெய், தைலம், தன்வந்திரி ஜப தீர்த்தம், சுக்கு, வெல்லம்
அருள்– பல்வேறு பிரச்சனைகள் தீர, நோய்கள் விலக தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்கு வந்து ேஹாமம், யாங்களில் பங்கேற்று பலன் பெறலாம்.
எப்படி செல்வது– சாலை வழியாக சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 110 வது கி.மீ., வாலாஜாபேட்டை பஸ் ஸ்டாண்டுக்கு வந்து அங்கிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் வரலாம்.
திருவண்ணாமலையில் இருந்து 100, வேலுாரில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உள்ளது.
ரயில் வழியாக, சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் கோவை மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் ஏறி, வாலாஜா சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து கார், ஆட்டோவில் வரலாம்.
திறந்திருக்கும் நேரம்– தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 வரை.
ஆரத்தி நேரம்– தினமும் காலை 10 மணி, மாலை 6 மணிக்கு கூட்டு பிராத்தனை மற்றும் மங்கள ஆரத்தி. ஞயிறு, வியாழன், சனிக்கிழமை மற்றும் ஓலைச்சுவடி படி 7 நாட்களும் தன்வந்திரி பகவானை தரிசிக்க உகந்த நாட்களாகும்.
தொடர்புக்கு– ஸ்ரீமுரளிதர சுவாமிகள், ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை– 632513, வேலுார் மாவட்டம்
தொலைபேசி– 04172 230033, 230274 மொபைல்: 94433 30203
Super message.
ReplyDeleteExcellent information sir
ReplyDeleteGood message sir
ReplyDeleteSuper information sir
ReplyDeleteSuper message sir
ReplyDeleteSuper new sir
ReplyDeleteExtra ordinary sir
ReplyDeleteGood information sir
ReplyDeleteGood news sir
ReplyDeleteநன்றாக இருக்கிறது sir
ReplyDeleteThank you for giving this news sir
ReplyDeleteGood information for all people sir
ReplyDeleteWonderful message sir
ReplyDeleteVery usefull news sir
ReplyDeleteThank you sir
ReplyDeleteExcellent sir
ReplyDeleteAmazing sir
ReplyDeleteNo words saying about message sir super sir
ReplyDeleteஅருமையான தகவல் sir
ReplyDeleteNice message sir
ReplyDeleteMind blowing sir
ReplyDeleteபடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறது சார்
ReplyDelete