செய்திகள் 4
ராணிப்பேட்டைமாவட்டம் மலையடிவாரத்தில் மேய்ச்சலில் இருந்த 13 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழப்பு - வருவாய் துறையினர் விசாரணை. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அனந்தலை மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில், மேய்ச்சலில் இருந்த 13 செம்மறி ஆடுகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். வாலாஜா அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி(50). விவசாயியான இவர் சொந்தமாக கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்ற நிலையில், செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென ஆடுகள் ஒவ்வொன்றாக மர்மமான முறையில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறையினர் ஆடுகள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வரு...