செய்திகள் 4

 ராணிப்பேட்டைமாவட்டம் 

மலையடிவாரத்தில் மேய்ச்சலில் இருந்த 13 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழப்பு - வருவாய் துறையினர் விசாரணை.

       ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா  அடுத்த அனந்தலை மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில், மேய்ச்சலில் இருந்த 13 செம்மறி ஆடுகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். வாலாஜா  அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி(50). விவசாயியான இவர் சொந்தமாக கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்ற நிலையில், செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென ஆடுகள் ஒவ்வொன்றாக மர்மமான முறையில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறையினர் ஆடுகள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்   

கே.வி. குப்பத்தில் காவல்நிலையத்தில் நிர்வாணமாக அட்ரா சிட்டியில்  ஈடுபட்ட காவலரால் பெண் காவலர்கள் அலறி அடித்து ஓட்டம் தமிழக முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை பாலியல் சீண்டல்கள் போன்ற குற்றங்களை தடுக்க வேண்டிய காவலரே பெண் காவலர் பணியில் இருந்த போது செய்த செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சிஅரசு  மருத்துவமனை  கண்ணாடியை உடைத்து மருத்துவரை தகாத வார்த்தைகளால் பேசி அட்ரா சிட்டி செய்த காவலரை இரண்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது.




  வேலூர் மாவட்டம் கே வி குப்பத்தில் நேற்று மாலை காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் அருண் கண்மணி என்பவர் இருசக்கர வாகனத்தில் போதையில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது கேவி குப்பம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது எதிரே சென்ற தனியார்க்கு சொந்தமான ஷூ கம்பெனி மினி வேனை மடக்கி உள்ளார்.மினி வேன் ஓட்டுனர் சேட்டு என்பவரிடம் காவலர் அருண் கண்மணி மது போதையில் எதற்கு வாகனத்தை என் மீது ஏற்றுவது போல் வந்தாய் என அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அருண் கண்மணி ஓட்டுநர் சேட்டு வை கே வி குப்பம் காவல் நிலையம் அழைத்து வந்து இவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி சொல்லியதாக கூறப்படுகிறது.அப்போது பணியில் இருந்த பெண் காவலர் நந்தினி கே வி குப்பம் காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்த நேரத்தில் அருண் கண்மணி நான் சொல்லியும் இன்னும் வழக்கு போடவில்லையா என தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மது போதையில் இருந்த காவலர்  அருண் கண்மணி உடனடியாக அவர் அணிந்திருந்த துணிகள் அனைத்தையும் கழட்டி வீசி விட்டு அட்ராசிட்டி செய்துள்ளார்.இதனால் பெண் காவலர் நந்தினி அலறி அடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த கே.வி. காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் காவலர்கள் அருண் கண்மணி பிடித்து  துணிகளை அணிவித்து உடனடியாக வழக்கு பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் மருத்துவ பரிசோதனைக்காக வந்த காவலர் அருண் கண்மணி அங்குள்ள கண்ணாடி கதவுகளை உடைத்துள்ளார். அதில் காவலர் அருண் கண்மணிக்கு கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிப்பதற்காக வந்த அரசு மருத்துவர் செந்தில் அவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்ய விடாமல் ரகளை செய்துள்ளார். இதனால் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மத்தியில் மது போதையில் இருந்த காவலர் செய்த அல்ட்ரா சிட்டியால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பின்னர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டு அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் அவதூறு வார்த்தைகளால் பேசியதாக மருத்துவர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் காவல் நிலையத்தில் பொது சொத்தை சேதப்படுத்தியதாகவும் அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் செய்ததாக வழக்கு பதிவு செய்தனர். மேலும் கே வி குப்பம் காவல் நிலையத்தில் ஷூ கம்பெனி வேன் ஓட்டுனர் சேட்டு கொடுத்த புகாரின் பேரிலும் காவல் நிலையத்தில் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரிலும் வழக்கு  பதிவு செய்து காவலர் அருண் கண்மணியை சிறையில் அடைத்தனர்தமிழக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல்  பிரச்சினைகளை தடுக்க வேண்டிய காவலரே பெண்  காவலர் பணியில் இருக்கும் போது துணிகளை கழட்டி நிர்வாணமாக காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கே வி குப்பம் காவல் நிலையத்தில் ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ம் 
மற்றும் காவலர் நந்தினி கொடுத்த புகாரின் அடிப்படையிலும் மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவர் குடியாத்தம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவின் கீழ் மொத்தம் இரண்டு காவல் நிலையத்தில் 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
மேலும் மது போதையில் இருந்த அருண் கண்மணி சில மாதங்களுக்கு முன் குடியாத்தம் காவல் நிலையத்தில் பணி புரிந்த போது மது போதையில் பானிபூரி கடை நடத்தி வந்த  வட மாநில இளைஞரிடம் ரகலையில் ஈடுபட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தற்போது காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 திருப்பத்தூர்மாவட்டம்    

 வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவிகளிடம் ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார். போலீசார் விசாரணை. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர் மலை ரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.அங்கு பணியாற்றக்கூடிய ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பிரபு இவர் அங்குள்ள கிருஷ்ணாபுரத்தில் தங்கி ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவர் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற கம்ப்யூட்டர் தேர்வின் போது ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய 6 மாணவிகளிடம் ஆங்கில ஆசிரியர் பிரபு என்பவர் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக மாணவிகள் உதவி மையம் என் 1098 புகார் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மேத்யூ என்பவர் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட 6 மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் கொடுத்த எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி நகர காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் அன்பரசி தலைமையிலான போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர்    


வேலூரில் தலைமை தபால் நிலையத்தில் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிர்த்து திமுகவினர் ஆர்பாட்டம் தபால் நிலைய ஹிந்தி பெயரை கருப்பு பெயிண்டால் அழித்தனர் 
__________________________________________________
     வேலூர்மாவட்டம்,வேலூர் தலைமை தபால் நிலையம் வெளியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாணவரணி அமைப்பாளர் அருண் தலைமையில் மத்திய அரசின் ஹிந்தி மொழி திணிப்பை கண்டித்து ஆர்பாட்டமானது நடந்தது இதனை திமுக அவைத்தலைவர் முகமது சகி துவங்கி வைத்தார் இதில் திரளான திமுகவினர் பங்கேற்று மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை கண்டித்து பல்வேறு  கோஷங்களை எழுப்பி ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் பின்னர் ஹிந்தியில் தலைமை தபால் நிலையம் என்றிருந்த பெயர் பலகையை கருப்பு பெயிண்ட் கொண்டு அழித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்

வேலூர்    


 தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாடத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
 
வேலூர்மாவட்டம்,சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரில்  தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோருதல் உள்ளிட்ட 10அம்ச கோரிகக்களை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நடத்துகின்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக  ஓய்வூதியர்கள் அனைவரும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இந்த ஆதரவு ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்  பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார்.  இதில் .  தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  ஜனார்த்தனன்,  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இதில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமூவர் குழுவை ரத்து செய் 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குகுறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 வழங்குசத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குகமுடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 10 ஆண்டுகளாக குறைத்திடுகமருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்திடுக உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர் 
    ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டத்தினால் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது

வேலூர்    


 
திருப்பத்தூரில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வுதுறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து போதைக்கு யாரும் அடிமையாகக் கூடாது,  போதைப் பழக்கத்திற்கு நான் ஆளாக மாட்டேன், என்னை சுற்றியுள்ள நண்பர்கள் மற்றும் பொதுமக்களை போதைப் பொருளை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன்.உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர் அதனைத் தொடர்ந்து இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 திருப்பத்தூர்மாவட்டம்     

திருப்பத்தூரில் திமுக மாணவரணி கூட்டமைப்பு சார்பில் மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்த்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மும்மொழிக் கல்வி கொள்கையை என்ற பெயரில் இந்தியை தமிழ்நாட்டில் திணித்து மீண்டும் மொழிப்போருக்கு வித்திடும் வகையில் செயல்படுவதாக கூறி பாஜக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேருந்து நிலையத்திலிருந்து 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக கைகளில் பதாகைகளை ஏந்தி மத்திய அரசை கண்டித்து  கண்டன கோஷங்களை எழுப்பி பாரத ஸ்டேட் வங்கி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருப்பத்தூர்மாவட்டம்     
 
திருப்பத்தூரில் பீடி தொழிலாளர்களின் கூலி 13 உயர்வுக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி  தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஐ.என்.டியுசி.எல்பி.எப்,ஏஐடியுசி, ஆகிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் உள்ள பீடி தொழிலாளர்களின் கூலி ரூபாய் 13 உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு  வெளியிட வலியுறுத்தி மாநில செயலாளர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
தமிழகத்தில் அரசாணை வெளியிடாத காரணத்தால் உயர்ந்துள்ள ரூபாய் 13ஐ கிருஷ்ணகிரியில் உள்ள ஓம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் திருநெல்வேலி முருகா ஓம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பீடி நிறுவனங்கள் 

உயர்வுக்கான கூலியை வழங்காமல் மறுத்து வருகிறது எனக் கூறியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 திருப்பத்தூர்மாவட்டம்    
 
பல்லலப்பள்ளி கிராமத்தில் நியாய விலை கடை வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பல்லலப்பள்ளி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.மேலும் இப்பகுதி மக்கள் நியாயவிலை கடைக்கு செல்ல சுமார் ஐந்து கிலோ மீட்டர் அளவிற்கு சென்று வரவேண்டிய நிலைமை உள்ளது எனவும் மேலும் நியாய விலை கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சுமார் 6 மாத காலமாக மனு கொடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இதுவரை அப்பகுதியில் நியாய விலை கடை அமைக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர்  திருப்பத்தூர் வழியாக கந்திலி செல்லும் பல்லலப்பள்ளி பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர் இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 திருப்பத்தூர்மாவட்டம்    
 
  தேர்தல் கால வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற கோரியும்   அல்லது பதவி விலகு என ஜாக்டோ_ஜியோவை சேர்ந்த 2000த்திற்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சிவராஜ் விடுதி அருகில் ஜாக்டோ_ஜியோ சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுக அரசு எதிராக பாதகை ஏந்தி கடும் வெயிலில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது வாக்குறுதி அளித்த பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரியும்,காலவரையின்றி முடிக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கை வலியுறித்தி திமுக அரசுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.அப்போது கோஷமிட்ட அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் உடனடியாக திமுக அரசு வீட்டிற்கு செல்ல வேண்டும் என கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 ராணிப்பேட்டைமாவட்டம்     
 
 
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சிக்கும் பாஜக அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

ராணிப்பேட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாணவர் அணி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  அப்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டு மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு தொடர்ந்து ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கடைப்பிடித்தால் மாணவர் அமைப்புகளின் சார்பில் போராட்டம் வலுப்பெறும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்

 ராணிப்பேட்டைமாவட்டம்  

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஜாக்டோ ஜியோ மறியல் போரை ஆதரித்து மாவட்ட தலைநகரில் 30 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியம் சங்கம் சார்பில் ஜாக்டோ ஜியோ மறியல் போரை ஆதரித்து மாவட்ட தலைநகரில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஊதியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபடி ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளுக்கான மாவட்ட தலைநகரங்களில் மரியார் போர் நடத்துகிறார்கள். அவர்களின் மறியல் போரை ஆதரிக்கும் விதமாக மாவட்ட தலைநகரங்களில் 30க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ராணிப்பேட்டைமாவட்டம்   
 

ஜாக்டோ ஜியோ சார்பில் 60க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

          ராணிப்பேட்டைமாவட்டம் ,முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழக அரசே பழைய புதிய முறையை நடைமுறைப்படுத்து , இடைநிலை ஆசிரியர் முதுநிலை ஆசிரியர் அரசு கண்காணிப்பாளர் ஊதியம் முரண்பாடு அணிக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குதல், சரண் விடுப்பு தடையானை நீக்குதல் சத்துண ஓவியர் கிராம உதவியாளர் மற்றும் இதர தொகுப்பு ஊதிய ஊதியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்குதல், போன்ற ஆசிரியர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் அரசாணை 243 ரத்து செய்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 60 கும் மேற்பட்டோர்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை