யானைகள் அட்டகாசம்

குடியாத்தம் பகுதியில்
புகுந்த யானைகளால்
மக்கள் அச்சம்

ஆந்திரா மாநிலம், சித்துார் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அதில் 40  யானைகள் பிரிந்து, வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே மோர்த்தானா பகுதியில்  விவசாயிகள் சீனிவாசன், 45, வெங்கடேசன், 65, சின்னபையன், 34, ஆகியோர் மாந்தோப்பில்  புகுந்து பிளறியபடி உள்ளது.
ஆந்திரா மாநிலம், கடப்பா வனப்பகுதியில்  இருந்து மேலும் 10 யானைகள், குடியாத்தம் அருகே தனகொண்ட பள்ளி பகுதியில் புகுந்து  சுற்றி சுற்றி வந்து கொண்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குடியாத்தம் வனத்துறையினரை கேட்டதற்கு, கோடைகாலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் குடிப்பதற்காக கூட்டம், கூட்டமாக ஆந்திரா மாநிலத்திலிருந்து, குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிக்கு யானைகள் வந்து கொண்டிருப்பதாகம், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்