வேலூர்

🌷🌷🔱இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களில் இருந்து அனைவரையும் காத்தருள்வாய் என் இனிய ஈசனே உன் ஆழ்ந்த கருணைக்கு நன்றி 🙏

🌷🌷மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோஷவேளை. வளர்பிறை பிரதோஷம் , தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷகாலம்.

🌷🌷அதில் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷ விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும் . இந்த நாளில் சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பாகும்.பிரதோஷ நேரம் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை உள்ளதாகும். பிரதோஷ வேளையான இந்நேரத்தில் சிவபெருமானையும், நந்தி தேவரையும் தரிசிப்பது மிகவும் சிறப்பானது. நினைத்த காரியம் கைகூடும்; வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

🌹🌹மேலும் செவ்வாய் கிழமை சிவ வழிபாடு ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். சிவனை தேவர்கள் மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம் என்று அழைக்கபடுகிறது.

🌹🌹செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், மேஷ, விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசிரிடம் , சித்திரை, அவிட்ட நட்காத்திரகாரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு கோவில் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும்.

🌹🌹அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள்

🌹🌹உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்களுடன் இனிய பிரதோஷ தின நல்வாழ்த்துக்கள்

🙏🌹 அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்