நடுகல்
ஆட்டு மந்தையை திருடிய
கூட்டத்தை பிடிக்க சென்று
இறந்த வீரனுக்கு நடுகல்
திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்துார் மாவட்டம், கொரட்டி ஏரிக்கரையில் திக்கியம்மன் என்ற கல்லுக்கு அப்பகுதி மக்கள் அடிக்கடி பொங்கல் வைத்து, கடா வெட்டி வழிபட்டு வந்தனர்.
அந்த கல்லை ஆய்வு செய்ததில், 1200 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்துக்களுனை் கூடிய நடுகல் என்பது தெரியவந்தது. 5 அடி அகலமும், 3 அடி உயரமும் உள்ள அந்த நடுகல்லில், கையில் வில், குறுவாள் ஏந்திய வீரன் ஒருவன் மார்பில் ஒரு அம்பு பட்டு உள்ள சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. பெரும்பனார் என்ற அரசன் ஆட்சியில் திருப்பத்துார் அருகே ஆலம்பட்டி என்ற கிராமத்தில் ஆட்டு மந்தையை ஒரு கூட்டம் திருடிச் சென்றது.
அப்போது பெரியசந்தை நீலனார் என்ற வீரன் ஒருவன் அந்த திருடர் கூட்டத்துடன் போராடி ஆட்டு மந்தையை மீட்டு வந்தார். அப்போது நடந்த சண்டையில் அந்த வீரன் இறந்தார்.
அவருக்காக அப்பகுதி மக்கள் எடுத்த நடுகல் என அதில் தமிழ் எழுத்துக்களாக வமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment