பாராட்டு சான்று
கொரோனா சூழ்நிலைக்கு பிறகு பொதுத்தேர்வு எழுத இருக்கும் வேலூர் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 215 பேருக்கு தேர்வுக்கு பயன்படும் scale, pencil அடங்கும் exam kit இலவசமாக வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ஊக்கமாக ஒரு கிராம் தங்கம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவிற்கு பிறகு தேர்வு என்பதால் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க Meditation செய்வது குறித்த புத்தகமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மதிப்பிற்குரிய திரு.அப்துல் முனீர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் திருமதி டாக்டர். சாந்தி உடன் இருந்தார்.
- Dinesh Saravanan
#vellore #service
Comments
Post a Comment