டை

*இந்தியில் பதில் சொன்ன அமைச்சரை ஆங்கிலத்தில் பேச வைத்த கனிமொழி கருணாநிதி எம்.பி*


ஒரு தேசம், ஒரு ரேஷன் என்ற ஒன்றிய அரசின் திட்டம் குறித்து  தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 

அதற்கு ஒன்றிய பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியில் பதிலளிக்கத் தொடங்கிய போது இடைமறித்த கனிமொழி கருணாநிதி "உங்களுக்கு ஆங்கிலம் நன்றாகவே தெரியும், இந்தியில் பேசினால் எனக்குப் புரியாது. நான் ஆங்கிலத்தில் தான் கேள்வி கேட்டேன், நீங்கள் ஆங்கிலத்திலேயே பதிலளியுங்கள்" என்று கூறினார். அதற்கு மொழிபெயர்ப்பு சேவைகள் கிடைக்கும் என அமைச்சர் கூறிய போதும் ஆங்கிலத்தில் பதிலளித்தால் நன்றாக புரியும் என கனிமொழி மீண்டும் கோரினார். எனவே கேள்விக்கான பதிலை ஆங்கிலத்தில் பேசினார் அமைச்சர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்