ஏரி தூர்வாரிய மக்கள்

[26/03, 8:01 am] Dhinakaran: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அயித்தம்பட்டு பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரி தண்ணீர் மூலம் அயித்தம்பட்டு, சின்ன வரிகம், பெரிய வரிகம் என 20 க்கும் மேற்பட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
கடந்த சில மாதங்களாக தமிழக– ஆந்திரா மாநில வனப்பகுதியில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த தண்ணீர் கானாறுகள் வழியாக பத்திரபல்லி மடல்பாறு, குண்டலபல்லி கொட்டாறு, சாரங்கல் பெருங்கானாறு வழியாக பேர்ணாம்பட்டு அருகே மதினாபல்லியில் ஒன்று சேர்ந்து பாலுார், கொத்துார், மாச்சம்பட்டு, பனங்காட்டூர், நரியம்பட்டு, சாத்தம்பாக்கம் வழியாக பச்சகுப்பம் பாலாற்றில் கலக்கிறது.
அங்கிருந்து உபரி நீர் பனங்காட்டூர், நரியம்பட்டு வழியாக அயித்தம்பட்டு பெரிய ஏரியை வந்தடைய வேண்டும்.
ஆனால் இப்பகுதியில் உள்ள பாசன கால்வாய் ஆக்கரமிப்பு மற்றும் இருக்கும் சிறிதளவு கால்வாயை துார் வாராததால் நீர் வழி பாதைகள் அடைபட்டுள்ளன.
இதனால் அயித்தம்பட்டு பெரிய ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.  இந்த பாசன தண்ணீரை நம்பி நெல், வாழை, கரும்பு, வெற்றிலை பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
அயித்தம்பட்டு பெரிய ஏரிக்கு தண்ணீர் வரும் பாசன கால்வாய் ஆக்கரமிப்புக்களை அகற்றி துார் வாரும்படி  திருப்பத்துார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதிகாரிகள் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் 120 பேர் ஒன்று சேர்ந்து இந்த பாசன கால்வாயின் உள்ள செடி, கொடிகளை அகற்றி மண் குவியலை அகற்றி துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அயித்தம்பட்டு விவசாயிகள் கூறியதாவது: திருப்பத்துார் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அயித்தம்பட்டு பெரிய ஏரியை
[26/03, 8:02 am] Dhinakaran: துார் வாரும்படி அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் செய்யவில்லை.
இப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து பணம் வசூலித்து ஆக்கரிமிப்புக்களை அகற்றி துார் வாரி வருகிறோம்.
ஏரியில் துார் வாரி விட்டால், நீர் பிடிப்பு பகுதி அதிகமாகி மூன்று கி.மீ., துாரத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும். பயிர்கள் காப்பாற்றப்படும்.
அரசு செய்ய வேண்டிய துார் வாரும் பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்