முதல்வரை சந்திக்க முடிவு
தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்கத்தொட்டி விசைம்பம்பு இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் ஆகிய சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் வேலுார் சத்துவாச்சாரியில் இன்று நடந்தது. மாநில பொருளாளர் ஜெயவேலு தலைமை வகித்தார்.
மாநில பொது செயலாளர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி விசைப்பம்பு இயக்குபவர்களை பணிநிரந்திரம் செய்ய வேண்டும், அவர்கள் ஓய்வு பெறும் போது 5 லட்சம் ரூபாய் பணிக்கொடை, பணிக்காலத்தில் இறந்தால் அவர்கள் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் துப்புறவு பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்களை பணி நிரந்திரம் செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினை சந்திப்பது, சென்னையில் நடக்கும் மாநில மாநாட்டில் அவரை அழைத்து பாராட்டு விழா நடத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணை தலைவர்கள் மண்ணு, கோவிந்தசாமி, இணை பொது செயலாளர்கள் பாபு, பாட்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment