நோய் தாக்கல்

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் அகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக நெல் பயிர்களை மர்ம நோய் தாக்கி வருகிறது.
பயிரிட்டு மூன்று மாதங்கள் முதல் நான்கு மாதங்கள் வரை வளர்ந்த நெல் பயிர்களை இந்த நோய் தாக்குவதால், நெற் பயிர்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறி கருகி வருகிறது.
ஆம்பூர் விவசாயிகள் கூறியதாவது: நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நெற் பயிர்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நெற் கதிர்கள் ஒருவித கருகலான நிலைக்கு வந்துள்ளன. நெற் கதிரின் உள்ள அரிசியை நீக்கியதும் கருகி உதிர்ந்து விழுகிறது.
இப்பகுதிகளில் 300 ஏக்கர் நெற் பயிர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய்க்கு மஞ்சள் கொல்லி என்று பெயர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து திருப்பத்துார் மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகளை கேட்டதற்கு, மர்ம நோயினால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை ஆய்வு செய்து வருகிறோம்.
விரைவில் இந்த நோயிலிருந்து நெற் பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்