எல்ஐசி ஊழியர் சங்க வேலூர் கோட்ட பொது செயலாளர் ராமன் பேட்டி

பங்குகளை விற்பதன்
மூலம் கிடைக்கும் தொகை
எல்.ஐ.சி., க்கு கிடைக்கப் போவதில்லை.
கோட்ட பொதுச்  செயலாளர் ராமன் பேட்டி


வேலுார் கோட்ட காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர்  ராமன் வேலுாரில்   நிருபர்களிடம் கூறியதாவது:
எல்.ஐ.சி.,  நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கான ஆவணங்களை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.  ஒன்றிய அரசு தற்போது வருவாய் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கிறது.
பெரு முதலாளிகள் கார்ப்பரேட் வரியை ஆண்டு தோறும் குறைத்துக் கொண்டே வருவதும், குறைக்கப்பட்ட வரியை அவர்கள் செலுத்தாத போது அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் தள்ளுபடி செய்வதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இவற்றை  சரி செய்வதற்கு பதிலாக பொதுத்துறை நிறுவனங்களை விற்று அரசை நடத்த பார்க்கிறார்கள். எல்.ஐ.சி., வசம் உள்ள அரசின் பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு ரூபாய் கூட எல்.ஐ.சி., க்கு கிடைக்கப் போவதில்லை.
அவை அரசின் கஜானாவுக்கு தான் செல்கிறது.
செபிக்கு ஒன்றிய அரசு தெரிவித்துள்ள முன் மொழிவில் இது தெளிவாக உள்ளது.  
ஒவ்வொரு ஆண்டும் எல்ஐசிக்கு வரும் உபரி நிதியில் 95 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு போனசாக வழங்கப்டுகிறது.
இப்போது அது 90 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் கிளைகள் நடத்துவது குறைக்கப்படும். சாமானிய மக்களுக்கான திட்டங்கள் காணாமல் போய் விடும்.  
எல்.ஐ.சி., தேசத்தின் கட்டமைப்புத் திட்டங்களில் செய்து வரும் முதலிட்டுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த முடிவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிர்வாகிகள்  பழனிராஜ், தேவராஜ், ரமேஷ்பாபு,  குணாளன் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்