மரம் நட்டார் அமைச்சர் துரைமுருகன்

வேலூர்   மோகன்
27-3-22

 தமிழகம் முழுவதும் ஆறுகள் ஏரிகள் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவின் படி 
பாகுபாடில்லாமல் முழுமையாக அகற்றப்படும்  - அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.

வேலூர்மாவட்டம் காட்பாடியில் நகர்புற வாழ்வாதார வேலைவாய்ப்பு திட்டத்தை ,
நீர் வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 
துவக்கி வைத்து மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்  .

 

விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் ,

 அரசின் சார்பில் ஒதுக்கப்படும் நிதிகள் முறையாக செலவிடப்பட வேண்டும் கடந்த ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் ஸ்மார் சிட்டிக்காக வந்தது அதனை எங்கே செலவிட்டார்கள் என்ன செய்தார்கள் என தெரியவில்லை.

 இந்த முறைகேடு குறித்து நான் விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுப்பேன்.

சமுதாய கூடங்கள் தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது இந்த ஆக்கிரமிப்பை மாநகராட்சி ஆணையர் ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று பேசினார் .

பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

 நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறோம் .

உச்சநீதிமன்றம்  கடுமையாக நடவடிக்கை எடுக்க சொல்லியதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை செயலாளரை அழைத்து இதுகுறித்து பேசுகிறார் .

 தமிழகம் முழுவதும் நீர் நிலை ஆக்கிரமிப்பு கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளில் யார் ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் பாகுபாடு இல்லாமல் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கபடும்.

 இல்லையென்றால் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துவிடுவார்கள்.

 சம்பந்தப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

  ஆறுகள் ஆக்கிரமிப்பை அகற்றவும் அளவீடு செய்து வருகிறோம்.

 அகரம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்.

 கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் மத்திய அரசின் திட்டம்.
 கர்நாடக எதிர்ப்பு தெரிவித்தால் மத்திய அரசு தான் கர்நாடக அரசுடன் பேச வேண்டும்.

தாமிர பரணி கருமேணி ஆற்றுடன் இணைக்கும் திட்டம் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் ,பாலாறு  செய்யாறு இணைப்பு ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் .

கனிம வளக்கொள்ளை திருடிசெல்கின்றனர் அதனை கண்டுபிடித்து வண்டிகளை பறிமுதல் செய்துள்ளோம் அது குறித்த புள்ளிவிவரங்களை சட்டமன்றத்தில் கூறுவேன் என்று கூறினார் .

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்