வேலை நிறுத்தம்

மத்திய மாநில அரசுகள் இன்றும் நாளையும் அறிவித்துள்ள இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை ஒட்டி வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 70% அரசு பஸ்கள் ஓடவில்லை தனியார் பஸ்கள் மட்டுமே இயங்கின அதில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டினர் வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலைக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து பஸ் நிறுத்தப்பட்டது அதேபோல திருப்பத்தூர் குடியாத்தம் வேலூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் சேர அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்தப்பட்டது இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் மேலும் தபால் அலுவலகம் எல்ஐசி போன்றவை செயல்பட வில்லை வேலூர் கோட்டம் எல்ஐசி அலுவலகத்தில் கோட்ட பொதுச்செயலாளர் ராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் எல்ஐசி ஊழியர்கள் பங்கேற்றனர்

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்