வேலூர்
தமிழக முதல்வருக்கு
வள்ளலார் தொண்டு நிறுவன
தலைவர் பாராட்டு
வள்ளலார் தொண்டு நிறுவன தலைவரும், தி.மு.க., பிரமுகருமான வள்ளலார் ரமேஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தொழில் தொடங்க அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது துபாய் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கையும் அவர் திறந்து வைத்தார். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் துபாய் உலக கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் தமிழ்நாடு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கை வினைப்பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல் மின்னணுவியல், தொாழில் பூங்காக்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் இந்த அரங்கம் அமைந்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெறுமை சேர்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது வக்கீல் பாலு உடனிருந்தார்.
Comments
Post a Comment