ஆர்பாட்டம்
நாள்: 22.03.2022
*இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர்*
*பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரி*
*வேலூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*
************
பங்களிப்பு ஓய்வூதியம் திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிகையை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் இன்று (மார்ச் 22ஆம் தேதி) மாலை வேலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளரும், கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எ.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ரஞ்சன் தயாளதாஸ் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.மணி ஆகியோர் ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் எம்.பி.சுரேஷ்குமார், பொருளாளர் பி.உமா, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எஸ்.ராஜேஸ்கண்ணா, செயலாளர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார், பொருளாளர் ஆர்.ஜெயகுமார், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வகுமார், செயலாளர் எ.எஸ்.திருஞானசம்பந்தம், பொருளாளர் ஜெ.காந்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பெ.இளங்கோ, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பி.கே.லட்சுமிவெங்கடேஷ், செயலாளர் எஸ்.எலிசா, பொருளாளர் வி.ரவி, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாவட்ட தலைவர் அ.பா.மணிவண்ணன், செயலாளர் கு.சங்கர், பொருளாளர் இரா.அமுதன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எம்.பாண்டுரெங்கன், ஆகியோர் பேசினர்.
தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் 01.04.2003 முதல் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் என்ற சி.பி.எஸ். (ஊளு) திட்டம் நடைமுறையில் உள்ள சமூக நீதிக்கு எதிரான இந்த திட்டத்திதை இரத்து ய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திட கோரி இது வரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள் நடைமுறை படுத்தவில்லை. தற்போது ஆட்சியல் உள்ள திராவிட முன்னேற்ற கழம் தனது தேர்தல் அறிக்கையில் வரி எண் 309ல் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை நினைபடுத்துகிறோம். நிறைவேற்றக் கோருகிறோம் மேலும் ஆசிரியர் ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக நடைபெறும் 28,29 ஆகிய இருநாட்கள் இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதெனவும் என்று தேசிய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், எல்.மணி ஆகியோர் பேசினர்.
செ.நா.ஜனார்த்தனன்
தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்
மற்றும் மாநிலத்தலைவர்
த.நா.மேநிப தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்
Ph :9443345667
Comments
Post a Comment