உடற்கல்வி ஆசிரியர் கைது
இராணிப்பேட்டையில் மாணவர்களைமிரட்டி தகாத உறவில்ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோவில் கைது.
இராணிப்பேட்டை காரை சிறுவர்சீர்திருத்தப் பள்ளியில் மாணவர்களை மிரட்டி . தகாத உறவில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியரைப் போலீஸார் போக்ஸோவில் கைது செய்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை
அருகே கரையில் சிறுவர்சீர்த்திருத்தப் பள்ளி இயங்கி வருகிறது பள்ளியில் திருப்பத்தூர்மாவட்டம் ஜோலார்பேட்டையடுத்த மண்டலவாடியைச் சேர்ந்த செந்தில் குமார்(47) உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி அப்பள்ளியில் 9முதல்12வகுப்பு வரையில் பயின்றுவரும்46 மாணவர்களை அடிக்கடி மிரட்டி நீண்ட நாட்களாக மாணவர்களுடன் தாகாத உறவு வைத்து வந்ததாக்க் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியில் சொல்லமுடியாமல் அச்சத்தில் இருந்த மாணவர்களின் நடவடிக்கையை சந்தேகித்த பள்ளி கண்காணிப்பாளர் விஜயகுமார் விசாரித்ததில் மாணவர்கள் உட்ற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரின் செய்கைகளைப்பற்றி தெரிவித்தனர் . இதனையடுத்து விஜயகுமார் இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து போக்ஸோசட்டத்தின் கீழ் செந்தில் குமாரைக்கைது செய்து விசாரத்து வருகின்றனர் .
Comments
Post a Comment