தஞ்சாவூர்

தஞ்சாவூரில்
கோலாகலம்
நமது மக்கள் கட்சி
மாநில பொதுக்குழு


நமது மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம், தஞ்சாவூரில் நடந்தது. கட்சியின் நிறுவனத்தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொதுச்செயலாளர் முரசு வீரையா, நமது மக்கள் கட்சி மாநில பொருளாளர் பார்த்தீபன், மாநில கொள்ளை பரப்பு செயலாளர் வீர சங்கர், மாநில துணைத்தலைவர்கள் சின்னதம்பி, சைமன், மாநில விவசாய அணி தலைவர் குணசேகரன், மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நமது மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் சரவண தேவா வரவேற்றார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தனி உள் ஒதுக்கீடு வழங்குவது தவறு. அப்படி வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை ரத்து செய்வதாகவும்,  சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியதை கருத்தில் கொண்டு விரைவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிக்கேற்ப அவர்களுக்கான பங்களிப்பை அளித்து சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.
* 22.2.1996 தேதி தமிழ்நாடு அரசாணை எண் 15 படி 20 பட்டப்பெயர்களில் வாழும் அனைத்து முத்தரையர்களும் இனி முத்தரையர் என்ற ஒரே இனமாக அழைக்கப்படும் என அரசாணை பிறப்பித்த பிறகும் இதுவரை அந்த அரசாணையை நடைமுறைபடுத்தாமல் உள்ளதால், நமது சமூதாயத்தினர் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் இந்த அரசாணையை நடைமுறைபடுத்தி முத்தரையர் சமூதாயத்தினருக்கு ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.
* உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவேரி ஆற்றில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு வரும் தண்ணீரை 
தடுத்து  நிறுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் கர்நாடகா அரசை கண்டிக்கிறோம். மத்திய அரசு இதில் தலையிட்டு கர்நாடகா அரசு கட்டும் அணையை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்துகிறோம்.
* மேகதாது வில் புதிய அணை கட்டும் கர்நாடகா அரசை கண்டித்து தஞ்சாவூரில் விரைவில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்.
* நமது மக்கள்  கட்சியின் மாநில மாநாட்டை ஆகஸ்ட் மாதம் புதுக்கோட்டையில் நடத்தப்படும். இதில் 10 லட்சம் பேர் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
* மதுரையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை திறந்து வைத்து பெருமை சேர்த்த உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவுக்கும், இதற்கு துணை நின்ற வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி,  சுற்றுச் சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோருக்கு இந்த பொதுக்குழுவில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
* பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை சென்னையில் நிறுவ வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றுபட்ட வேலுார் மாவட்ட நமது மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் கல்யாணம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில இளைஞர் அணி தலைவர் சரவணன் குஞ்சுப்பிள்ளை நன்றி கூறினார்.
பேட்டி: நமது மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் ராஜமாணிக்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
மேகதாது வில் புதிய அணை கட்டும் கர்நாடகா அரசை கண்டித்து தஞ்சாவூரில் விரைவில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும். தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடத்தப்படும்.
நமது மக்கள்  கட்சியின் மாநில மாநாட்டை ஆகஸ்ட் மாதம் புதுக்கோட்டையில் நடத்தப்படும். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை சென்னையில் நிறுவ வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுப்படும்.
அனைத்து முத்தரையர்களும் இனி முத்தரையர் என்ற ஒரே இனமாக அழைக்கப்படும் என பிறப்பித்த  அரசாணையை நடைமுறைபடுத் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்