பேரணி
வேலூர் 22-3-22
வேலூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசுக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பரிசோதித்து தரமற்றவைகள் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்படும் - பாலாற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தடுப்பனைகள் அமைக்க அரசுக்கு பரிந்துரை விரைவில் பணிகள் துவங்கும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூரில் பேட்டி
_____________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூரில் காந்தி சிலை அருகிலிருந்து உலக தண்ணீர் தினமான இன்று காந்தி சிலையிலிருந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில்; மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மாணவ,மாணவிகள் பங்கேற்றனர் பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தண்ணீர் தினம் இன்று கொண்டாடபடுகிறது தண்ணீர் அளவான பொருள் ஆனால் தண்ணீரை நிலையாக இருக்குமே தவிர அதனை அதிக்கப்படுத்த முடியாது அதனை சேமிக்க வேண்டுமென விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலத்தை துவங்கியுள்ளோம் வேலூர் வெய்யிலூர் என்பதை மாற்ற சூளரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் கிராம சபை கூட்டங்களிலும் தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது இதற்கு அரசாங்கம் முயற்சிகளை செய்து தண்ணீரை வீணடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் மலைகளுக்கு சமூக விரோதிகள் தீ வைப்பது தடுக்கபடும் கண்காணிக்கப்படும் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் மூலம் 63 எம்.எல்.டிகொடுக்க வேண்டும் ஆனால் 55 எம்.எல்டி வழங்கி வருகிறோம் மீதமுள்ள தண்ணீர் முழு அளவு கொடுக்க ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குடிநீர் பைப்புகளையும் சீரமைக்கப்பட்டு வருகிறது ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் தரமில்லாத தண்ணீரை பயன்படுத்த வேண்டாமென கூறியுள்ளோம் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படும் பாலாற்றில் இரண்டு தடுப்பனைகளுக்கு ஒப்பந்தம் விடப்படவுள்ளது பாலாற்றில் குறுக்கே வடிவமைத்து அணைகள் கட்டப்படும் இறைவன் காடு மற்றும் விரிஞ்சிபுரம் ஆகிய இரண்டு இடங்களில் அணைகள் கட்டப்படும் சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்து விற்பதை தடுக்கவும் குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம் சட்டவிரோதமாக ஆற்றின் ஓரம் தண்ணீர் எடுத்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறினார்
பேட்டி:குமாரவேல் பாண்டியன் (வேலூர் மாவட்ட ஆட்சியர்)
Comments
Post a Comment