வேலூர்
எல்.ஐ.சி., ஊழியர்கள்
ஆர்பாட்டம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், எல்.ஐ.சி., பங்கு விற்பனை செய்வதை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ம கோரிக்கைகள் வலியுறுத்தி 10 மத்திய தொழிற் சங்கத்தினர் 28, 29 ம் தேதிகள் வேலை நிறுத்தம் நடந்தது.
இதையொட்டி வேலுார் கோட்ட எல்.ஐ.சி., அலுவலகத்தில், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் போராட்டத்தை ஆதரித்து இன்று ஆர்பாட்டம் நடந்தது.
வேலுார் கோட்ட பொதுச் செயலாளர் ராமன் தொடங்கி வைத்து பேசியதாவது: எல்.ஐ.சி., தேசத்தின் விலை மதிப்பில்லா சொத்து. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு.
மக்கள் நலத் திட்டங்களுக்கு அள்ளி தரும் கற்பக விருட்சம். நம்பிகையின் மறு பெயர், சேவையில் அடையாளமாக உள்ள எல்.ஐ.சி., யின் பங்குகளை விற்பது தகுமா?
தேசத்தின் சொத்து தனியார் கைவசம் செல்வதா?
இதனால் தேச வளர்ச்சிக்கான நிதி திரட்டுவது, சாதாரண மக்களுக்கான காப்பீடு, சிறிய கிராமங்களில் இன்சூரன்ஸ் கிளைகள் உள்ளது பாதிக்கப்படும். வங்கி, பொது இன்சூரன்ஸ், தொலை தொடர்பு, ரயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை கைப்பற்றி வேண்டுமென்ற பெரும் கார்ப்பரேட்டுக்களின் பேரசையால் வந்த வினை இது.
பட்ஜெட்டில் வரும் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட கார்ப்பரேட் வரிகள், செல்வ வரிகளை உயர்த்தாமல் எல்.ஐ.சி., யின் பங்குகளை விற்று சரி கட்ட நினைப்பது மத்திய அரசின் தவறான பாதை.
அதே சமயம் எல்.ஐ.சி., யின் மொத்த சொத்துக்கள் 39 லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு ஆண்டும் 6.82 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தருகிறது 98 சதவீதம் இறப்பு உரிமம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
50 சதவீத அலுவலகங்கள் கிராமங்கள், சிற்றுர்களில் உள்ளது. இதனால் நஷ்டம் இல்லை. திறமை குறைபாடு இல்லை. இன்சூரன்ஸ் பரவில் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைந்து கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில், எல்.ஐ.சி., யின் பங்கு விற்பனை, இரண்டு வங்கிகள் தனியார் மயம், ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் தனியார் மயம், ரயில்வே சேவைகளில் தனியார் அனுமதிப்பது ஞாயமா? இவ்றை மத்திய அரசு கை விட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. வேலுார் கோட்ட நிர்வாகிகள் பழனிராஜ், தேவராஜ், ரமேஷ்பாபு, குணாளன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இது போன்ற ஆர்பாட்டங்கள் திருவண்ணாமலை, புதுச்சேரி, போளூர், குடியாத்தம், ராணிப்பேட்டை, சிதரம்பரம், கள்ளக்குறிச்சி, வாணியம்பாடி, நெய்வேலி, ஆரணி, விருத்தாச்சலம், செய்யார், விழுப்புரம் ஆகிய எல்.ஐ.சி., கிளை அலுவலகங்களில் நடந்தது.
Comments
Post a Comment