தர்ணா
தர்ணா போராட்டம்
எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கை ஒன்றிய அரசு விற்பனை செய்வதை கண்டித்து, காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் வேலுார் கோட்ட எல்.ஐ.சி., அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.
கோட்ட தலைவர் பழனிராஜ் தலைமை வகித்தார். வேலுார் கோட்ட பொதுச் செயலாளர் ராமன் தொடங்கி வைத்தார்.
துணைத் தலைவர் தேவராஜ், இணைச் செயலாளர் ரமேஷ்பாபு, மார்க்., கம்யூ மாவட்ட செயலாளர் தயாநிதி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் பரசுராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், எல்.ஐ.சி., பங்கு விற்பனை செய்வதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Comments
Post a Comment