பிரம்பு நாற்காலி விற்பனை

 ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில், 400 ஆண்டுகளுக்கு மேலாக, பிரம்பு நாற்காலி தயார் செய்யும் தொழில் நடந்து வருகிறது.
இதில், 300 பேர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தஞ்சாவூர், அசாம், அந்தமான் ஆகிய பகுதிகளிலிருந்து பிரம்புகளை வாங்கி வந்து, வளைத்து, நெளித்து அழகிய பிரம்பு நாற்காலிகள், சாய்வு நாற்காலி, ஊஞ்சல், டீப்பாய், தொப்பி, மலர் கூடை, தட்டு, பொம்மை, அழுக்கு துணி போடும் கூடை, சோபா, புத்தக அலமாரி, கொலு படிகட்டு, டிவி ஸ்டாண்டு, லேப்டாக் ஸ்டாண்டு என 50 க்கும் மேற்பட்ட பொருட்கள் தயார் செய்கின்றனர்.
புதிய மாடல்களை அனுப்பினால் அதையும் தயார் செய்து கொடுக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பிரம்பு பொருட்களுக்கு ரசாயனம் கலந்த பெயிண்ட் அடிக்காமல், இயற்கை முறையில் பழங்களில் தயாரிக்கப்படும் பொருட்களால் பல வண்ணங்களில் வார்னீஷ் செய்யப்படுகிறது.
அந்தந்த மாடலுக்கு தக்கபடி மூன்று நாட்கள் முதல் 10 நாட்களில் பிரம்பு பொருட்கள் தயாரிக்கின்றனர்.
போலீசார் பயன்படுத்தும் லத்திகள்,  பாதுகாப்பு தடுப்புக்கள் ஆகியவை, இங்கிருந்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
ஒரு ஆண்டுக்கு 2 லட்சம் லத்திகள் சப்ளை செய்யப்படுகிறது. இந்தாண்டு முதல் முறையாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கும் போலீஸ் லத்திகள் வினியோகிக்கின்றனர்.
பிரம்பால் செய்யப்படும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தால் முதுகு வலி, மூட்டு வலி வராது.  உடல் வலியை போக்கி நல்ல துாக்கத்தை கொடுத்து, உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதால், இதற்கு கிராக்கி அதிகம்.
தற்போது புதியவர்களும், பெண்களும் இத்தொழிலுக்கு வந்துள்ளனர். இதனால் வாலாஜாபேட்டையில் பிரம்பு குடிசை தொழில் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு 50 பேருக்கு பயிற்சியும�
[26/03, 8:00 am] Dhinakaran: அளிக்கப்படுகிறது.
50 ரூபாயில் தொடங்கி 5,000 ரூபாய் வரையில் பிரம்பு பொருட்கள் தயார் செய்து விற்கின்றனர்.  பிராம்பு சாய்வு நாற்காலி, நாற்காலிகள் 1,000 ரூபாய் முதல், 6,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.  இங்கு தயாரிக்கப்படும் பிராம்பிலான பொருட்கள் விற்பனை செய்ய தனி கடைகள் இல்லை.
வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனை அருகில் சாலையோர கடைகளில் வைத்து விற்கின்றனர். தினமும் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது.
தற்போது, லண்டன், ஸ்வீடன், சிங்கப்பூர், மலேசியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆர்டரின் பேரில் தயார் செய்து அனுப்புகின்றனர்.
இது குறித்து பிரம்பு தொழில் செய்பவர்கள் கூறியதாவது:
பிரம்பு தொழில் செய்ய தற்போது வங்கிகள் கடன் வழங்குகின்றனர். ஆனால் அதற்கு ஜாமின் கேட்கின்றனர்.
ஜாமின் இல்லாமல் மானியத்தில் வங்கி கடன் கொடுத்தால் தொழிலை அதிகப்படுத்தலாம். 100 க்கு 50 பேர் முதுகு வலி, மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள்.
வயதானவர்கள் உட்காரவே முடியவில்லை.  மருந்து, மாத்திரைகளுக்கு அடிமையாகிறார்கள். அவர்கள் அதற்கு பதிலாக பிரம்பு நாற்காலி, சாய்வு நாற்காலிகள் பயன்படுத்தி இது போன்ற வியாதிகளிலிருந்து தப்பிக்கலாம்.
இந்த தொழிலை விரிவுபடுத்தினால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதற்கு மாவட்டங்கள் தோறும் பிரம்பு பொருட்களுக்கு என கண்காட்சி நடத்தலாம். வெளிநாடுகளில் சந்தைபடுத்தலாம்.
முழுக்க முழுக்க பிரம்பிலான் வீடு மேற்கூரைகள், ஜன்னல், கதவுகள், சமையல் அறை போன்றவற்றையும் தயாரிக்கலாம்.
இதற்காக முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்