மாவட்ட தலைவர் நியமனம்

திருக்கோவில்கள்
அமைப்பு மாவட்ட
தலைவர் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்டம், நடுவீரப்பட்டு பகுதியில் செயல்படும் உலக இந்து திருக்கோவில்கள் அமைப்பின் வேலுார் மாவட்ட தலைவராக         சத்துவாச்சாரியை சேர்ந்த ஆர். ரமேஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக இந்து திருக்கோவில்கள் அமைப்பின் நிறுவனத் தலைவர் என்.சி., சீனிவாசன்  ஒப்புதலுடன் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட ரமேஷ் கூறியது: வேலுார் மாவட்டத்தில் ஆன்மீகப்பணி,  மக்கள் பணிகள் சிறப்பாக செய்வேன்.
அனைத்து கோவில்களிலும் ஆன்மீகம் வகுப்பு, பக்தி சொற்பொழிவுகள் மற்றும் அனைத்து திருவிழாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட ரமேஷ், வேலுார் சத்துவாச்சாரி வலம்புரி விநாயகர் கோவில் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்