நடை பயணம்

5 மில்லியன் இளைஞர்கள்
ரத்ததானம் செய்ய ஆரம்பித்தால்
ஒரு மரணம் கூட ஏற்படாது  
கிரண் வர்மா

டெல்லியை சேர்ந்த சமூக சேவகர் கிரண் வர்மா. இந்தியாவில் ரத்த விழிப்புணர்வுக்காக 21 ஆயிரம் கி.மீ.,  துாரம் நடைபயணம் செய்ய  கடந்தாண்டு டிச., மாதம் 28 ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார்.
இன்று வேலுார் வந்த இவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2025 ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் ரத்தத்திற்காக காத்திருந்து யாரும் இறக்கக்கூடாது என்பதற்காக, மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்ள இந்த நடைபயணம் மேற்கொள்கிறேன்.
கொரோனா தொற்றுக்கு பிறகு ரத்ததானம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.
5 மில்லியன் இளைஞர்கள் ரத்ததானம் செய்ய ஆரம்பித்தால் இந்தியாவில் ஒரு  ரத்தம் கிடைக்காமல் ஒரு மரணம் கூட நிகழாது.  
இதுவரை கொல்லம், ஆலப்புழா, மங்களூரு, உடுப்பி, பெங்களூரு, மைசூர், கோவை, திருப்பூர், திருநெல்வேலி, கடலுார், புதுச்சேரி, காஞ்சிபுரம் சென்னை, திருவள்ளூர் விழிப்புணர்வு செய்துள்ளேன். தற்போது வேலுாரில் இருந்து ஆந்திரா மாநிலம் வழியாக டெல்லி வரை நடைபயணம் செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்