விபத்து பெண்கள் 11 பேர் பலி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கோயிலுக்கு  சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் பக்தர்கள்  பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.அனைவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தை சேரந்தவர்கள் 30க்கும் மேற்பட்டோர் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய மகேந்திரா பிக்கப் வாகனம் மூலம் சென்றனர்.அப்போது மகேந்திரா பிக்கப் வாகனம் தனது கட்டுபாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.மேலும் பலத்த படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோரை அப்பகுதி மக்கள் திருப்பத்தூர்  கிராமிய காவல் துறையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில்  சுகந்தி(55),துர்கா(40)பரிமளா (12),செல்வி (35),மங்கை (60),பவித்ரா (18) ஜெயப்பிரியா (16), திக்கி அம்மாள் (47),சின்னதிக்கி (22),அலமேலு(12), சென்னம்மாள்(12) என சுமார் 11 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்கோயிலுக்கு சென்று விபத்தில்  ஒரே ஊரை சேர்ந்த 11பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிரிழந்த அனைவரும்  பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்ள்ளி மாணவி 16 வயது ஜெயப்பிரியா என்ற பெண் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பலியாகி உள்ளார்
இதன் காரணமாக சுமார் 11பேர் விபத்து காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது  விபத்தில் படுகாயமடைந்து  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஆனி விஜயா சந்தித்து ஆறுதல் கூறினார் 
  ஒரே கிராமத்தை சேர்ந்த 11 பேரின் உடல்கள் மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக வரிசையாக வைக்கப்பட்டுள்ளது அக்கிராம மக்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்