வேலூரில் பாலாறு பெருவிழா 5 நாட்கள் நடக்கிறது: சக்தி அம்மா

வேலுாரில் பாலாறு
பெருவிழா 5 நாட்கள்
நடக்கிறது: சக்தி அம்மா

வேலுார்:
வேலுாரில் பாலாறு பெருவிழா, 5 நாட்கள் நடப்பதாக சக்தி அம்மா கூறினார்.
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் ஒருங்கிணைந்து நடத்தும் பாலாறு பெருவிழா வேலுாரில் 5 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம், வேலுார் ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் இன்று நடந்தது.
அகில பாரதீய சந்நியாசிகள் சங்க தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். சக்தி அம்மா ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பாலாறு திரு உருவச்சிலையை திறந்து வைத்தார். பாலாறு பெருவிழா விழா அழைப்பிதழை வெளியிட்டார்.

பின்னர் சக்தி அம்மா  நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் சார்பில், நதிகளை போற்றி பாதுகாப்போம் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாலாறு பெருவிழா நடைபெற உள்ளது.
இதற்காக பாலாற்றின் சிறப்பை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மே மாதம், பாலாறு உற்பத்தியாகும், கர்நாடகா மாநிலம், நந்தி மலையிலிருந்து தீர்த்த கலசங்களுடன் ரத யாத்திரை நடக்கிறது.
கர்நாடகா, ஆந்திரா மாநிலம் வழியாக தமிழ்நாட்டில் திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி கனகநாச்சியம்மன் கோவில் அருகில் வந்தடைகிறது.
பின்பு ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக கிழக்க  கடற்கரை சாலையில் உள்ள சின்னக்குப்பம் என்ற கிராமத்தில் கடலில் கலக்குமிடம் வரை  222 கி.மீ., துாரம் ரத யாத்திரை செல்கிறது.
பாலாறு ரத யாத்திரை நிறைவு விழாவையொட்டி, வரும் ஜூன் மாதம் 29 ம் தேதி முதல் ஜூலை 3 ம் தேதி வரை 5 நாட்கள் பாலாறு பெருவிழா என்ற பெயரில் வேலுார் ஸ்ரீபுரம் நாராயணி பீடம், நாராயணி மஹாலில் நடைபெறுகிறது. இதில் சாதுக்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பொது மக்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக வரும் ஜூன் மாதம் 29 ம் தேதி மாநாடு துவக்க விழா நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதுமிருந்து துறவிகள் கலந்து கொள்கின்றனர். 30 ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சைவ, வைணவ, வீர சைவ ஆதீனங்கள், மடாதிபதிகள், இறைநிறை அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஜூலை 1 ம் தேதி, பெண் துறவியர் மற்றும் சாதனையாளர்கள் கலந்து கொள்ளும் சக்தி மாநாடு நடைபெறுகிறது. 
 2 ம் தேதி இயற்கை விவசாயம், நீர் வளம் பாதுகாப்பு, நாட்டு பசு குறித்து கருத்தரங்கம் நடைபெறுகிறது.
 3 ம் தேதி கிராமக் கோவில் பூசாரிகள் மாநாடு நடைபெறுகிறது.
இதில் வேள்விகள் வழிபாடு வழிபாடு பூஜை முறைகள் குறித்து கருத்தரங்கம் நடைபெறுகிறது.

விழா நடக்கும் 5 நாட்களும், காலை 6:00 மணி முதல் இரவு 8:00  வரை பாலாறு திரு ஊருவச்சிலைக்கும், பாலாறு புனித நீர் கலசங்களுக்கும் வழிபாடுகள், மாலை 5:30 மணி முதல் இரவு 7:00 வரை வேலுார் செல்லியம்மன் கோவில் அருகில் பாலாற்றங்கரையில் மஹா ஆரத்தி நடைபெறும்.

பாலாற்றை போற்றும் விதத்தில், வேலுாரில் பாலாற்றங்கரையோரம் பாலாறு திரு ஊருவச்சிலை வைத்து கோவில் கட்டப்படும். இங்கு தினமும் வழிபாடு, ஆராதானைகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் துணைத் தலைவர்கள் ராமானந்தா, குமரகுருபரர், சம்பத்குமார ராமானுஜ ஜீயர், பொதுச் செயலாளர் ஆத்மானந்த சரஸ்வதி, பொருளாளர் வேதாந்த ஆனந்தா, இணைச் செயலளார் சிவராமானந்தா.
அறங்காவலர்கள் யோகி சிவபிரமானந்த சரஸ்வதி, காளீஸ்வரரானந்தா சரஸ்வதி, சுத்த வித்யானந்த சரஸ்வதி, ஈஸ்வராஜந்தா மற்றும் கலவை சச்சிதானந்த சுவாமிகள், விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்  ஜெய்சங்கர், நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி.
நாராயணி பீடம் மேலாளர் சம்பத், மாநாடு அலுவலக பொறுப்பாளர் கோரஷூானாந்தா சரஸ்வதி, அப்பு பால் பாலாஜி, இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ், வணிகர் சங்கம் தலைவர் ஞானவேல், பாஜக கலைமகள் இளங்கோவன், SKY டிவி நிர்வாக இயக்குனர் சீனிவாசன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

  1. மிக்க மகிழ்ச்சி நன்றி ஜி

    ReplyDelete
  2. A Historical event
    We are blessed that we living in this period
    Om Namo Narayani

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்