சிறையில் தயாராகும் அட்டை பைல்கள்

சிறையில் தயாராகும்
அட்டை பைல்

வேலுார் மாவட்டம், வேலுார் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை உள்ளது. இங்கு நன்னடத்தை கைதிகளை கொண்டு ஷூ, பேண்டேஜ், கைத்தறி துணிகள், பெனாயில் என 25 வகையான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றது.
அதில் அதிக வரவேற்பை பெற்றது அட்டை பைல்கள். அனைத்து அரசு அலுவலங்களில் கடிதங்கள் பரிவர்த்தனைகள்   அட்டை பைலில் தான் வைத்து தான் அதிகாரிகள் ஒப்புதல் பெற அனுப்பப்படுகிறது.
அனைத்திலும் கணினி மயம் வந்தாலும், அட்டை பைல்களுக்கு மகத்துவம் குறையவில்லை. பெரும்பாலான முக்கிய கோப்புக்கள், கடிதங்கள் இன்றளவும் அட்டை பைல்களில் வைத்து பல ஆண்டுகள் பாதுகாக்கப்படுகின்றது.
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஆண்டுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அட்டை பைல்கள் வாங்குகின்றனர்.
இதையறிந்த சிறைத்துறையினர் 80 நன்னடத்தை கைதிகளுக்கு பயிற்சிகள் கொடுத்து ஆண்டுக்கு 2 கோடி அட்டை பைல்கள் தயாரித்து அரசு அலுவலகங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
கொரோனாவுக்கு முன்பு ஒரு அட்டை பைலின் விலை 10. கொரோனாவுக்கு பிறகு 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
நேரடியாக சிறைக்கு சென்ற பைல்கள் வாங்க முடியாது. ஆர்டரின் பேரில் சப்ளை செய்யப்படுகின்றது.
இதற்காக ஈரோடு, கோவை, சிவகாசியில் இருந்து அட்டைகள் வாங்கி அதை கட்டிங் இயந்திரத்தில் கட் செய்து, அதில் விதவிதமான கலர்களில் பேப்பர் ஒட்டி  வெய்யிலில் காய வைக்கின்றனர்.
அதற்கு பிறகு துணி கயிற்றால் திறந்து மூடும்படி தடித்த அட்டைகளை சொருகி தைத்து பைல் தயாரிக்கின்றனர்.
இந்த பைல்களை தயாரிக்கும் கைதிகளுக்கு தினமும் 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை அவர்கள் தயாரிக்கும் எண்ணிக்கைக்கு தக்கபடி கூலி கிடைக்கிறது.
இதில் பாதி பணத்தை கைதிகளின் குடும்பத்தினருக்கும்,   மீதி பணம் கைதிகளின் வங்கி கணக்கில் போடுவதால் கைதிகள் குடும்பந்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்