கள்ளக்காதலர்களிடம் விசாரணை

ஆற்காடு அருகே முகம் சிதைக்கப்பட்டு. கிண்ற்றில் மிதந்த பெண்ணின் சடலம் 
கள்ளக்காதர்களை பிடித்துப் போலீஸார் விசாரணை.
ஆற்காடு அடுத்த  சின்ன  குக்குந்தியில் காணாமல் போனதாக தேடிவந்த பெண் முகம்சிதைக்கப்பட்டு  விவசாய கிணற்றில்  சடலமாக மிதந்து குறித்து சந்தேகித்து போலீஸார்   கள்ளக்காதலர்கள் இருவரைப்பிடித்து  விசாரித்து   வருகின்றனர் .

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்தசின்னகுக்குந்தையைச்சேர்ந்தவர் ஜெய்சங்கர் (40),கூலித்தொழில் செய்துவருகிறார்  அவரது மனைவி  மகேஸ்வரி(35)  சித்தாள் வேலைசெய்து வந்தார். தம்பதியினருக்கு 13,,11,வயதில் மகன்,மகள் உள்ளனர்  மேலும்    மகேஸ்வரி சிலருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது இந்நிலையில் 
கடந்த வாரம்  மகேஸ்வரி அவரது  தாய்வீட்டிற்கு செல்வதாக கூறிசென்றவர் மீண்டும்  வீடுதிரும்பவில்லை .  எனவே  மனைவி மாயமானது குறித்து ஜெய்சங்கர் கடந்த 31ந்தேதியன்று   ஆற்காடு கிராமியக் காவல்நிலையத்தில்  புகார் அளித்தார் .
புகாரின்பேரில்  
 மகேஸ்வரியை போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில் 
இன்று காலை அதேகுக்குந்தியில் உள்ள விவசாயக் கிணற்றில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின்  சடலம் மிதப்பதாக ஆற்காடு  கிராமியப் போலீஸாருக்கு  தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்குச் சென்ற போலீஸார்  காணாமல்போன   மிதந்நு கிடப்பது மகேஸ்வரியின்  சடலம் என்பதை உறுதிசெய்தனர் .இதனையடுத்து   வழக்குப்பதிவு செய்தப்போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி  பரிசோதனைக்காக அடுக்குப்பாறைமருத்து வமனைக்கு அனுப்பிவைத்தனர் .

இதற்கிடையே தகவலறிந்த   மகேஸ்வரின் கணவர் ஜெய்சங்கர் மற்றும் அவரது உறுப்பினர்கள்  சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள்    மகேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர்களே  அவரைக்  கொன்று கிணற்றில்  போட்டுள்ளதாகவும் அவர்களை  உடனே  கைது செய்யவேண்டுமென   காவல்நிலையத்தை முற்றுகையிட்டு  ஆற்காடு  -செய்யாறு செல்லும்  சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் . இதனால்  அப்பகுதியில்  சுமார்20 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்து பரபரப்பு ஏற்பட்டது. 
இதனையடுத்து  குக்குந்தியைச்சேர்ந்த இருவரைப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தப்போலீஸார்   கள்ளக் காதல் போட்டி  காரணமாக மகேஸ்வரி கொல்லப்பட்டாரா? என்று  தீவிர விசாரணையில் ஈடுபட்டு  வருகின்றனர்.
சத்தியநாராயணன் | நிருபர்

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்