கிணற்றில் தள்ளி பெண்ணைகொலை செய்தவர் கைது
கள்ளக்காதலியை கிணற்றில்
தள்ளி கொலை செய்தவர் கைது
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 40. இவர் மனைவி மகேஸ்வரி, 34. இருவரும் கட்டிட வேலை செய்து வந்தனர். மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் 30 ம் தேதி தகரகுப்பத்தில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற மகேஸ்வரி, கடந்த 2 ம் தேதி பெரியகுக்குண்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக கிடந்தார்.
ஆற்காடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
மகேஸ்வரிக்கும், பெரியகுக்குண்டி ஏரிக்கரையை சேர்ந்த கட்டட தொழிலாளி பிரபு, 27, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. மேலும் சில கட்டட தொழிலாளர்களுடன் மகேஸ்வரிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதை பிரபு கண்டித்தார். மகேஸ்வரி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. ஆத்திரமடைந்த பிரபு கடந்த 30 ம் தேதி மல்லிகை பூ, அல்லாவை வாங்கிக் கொடுத்து மகேஸ்வரியை பெரியகுக்குண்டிக்கு அழைத்து வந்தார். அங்குள்ள ஒரு கிணற்றின் அருகில், உல்லாசம் அனுபவித்து விட்டு, டார்ச் லைட்டால் மகேஸ்வரி தலையில் அடித்து கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.
போலீசார் பிரபுவை இன்று கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
நிருபர் சத்தியநாராயணன்
Comments
Post a Comment