நெற்பயிர்களை அதிகாரிகள் நாசம்
நான்கு ஐந்து தினங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முன்னறிவிப்பு ஏதுமின்றி அழித்து நாசம் செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயி கதறல்
ராணிப்பேட்டை மாவட்டம்
தமிழகத்தில் நீர்பிடிப்பு ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாவட்டம்தோறும் துரிதமாக வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்று வருகிறது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்காவிற்க்குட்பட்ட கலவை அடுத்த பல்லமுள்வாடி பகுதியில் வசித்து வருபவர் பாலு இவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விளை நிலம் அப்பகுதியில் உள்ளது அந்த நிலத்தை ஒட்டிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர் நிலை கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துந்துள்ளார்
இந்நிலையில் விவசாயி பாலு அந்த நிலத்தில் மூன்று மாத பயிரான ADT 37 ரக குண்டு நெற்பயிர் சாகுபடியை பயிரிட்டுள்ளார்
இந்நிலையில் இன்று விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் யாரும் இல்லாத போது பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி டக்டர் இயந்திரம் மூலமாக பயிறிட்ட ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள நெற்பயிர்கள் ஐ முழுமையாக அழித்து நாசம் செய்துள்ளனர் இன்னும் 4,5 தினங்கள் கால அவகாசம் வழங்கி இருந்தால் அறுவடை முடித்த பிறகு நாங்கள் அந்தப் ஆக்கிரமிப்பு பகுதியில் விவசாயம் செய்திருக்க மாட்டோம் என பாலு மற்றும் அவரது மனைவி அழிக்கப்பட்ட நெற்பயிர்களை கட்டி அணைத்து அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது
ஆக்கிரமிப்பு பகுதி என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் ஒரு வார காலம் அவகாசம் கொடுத்து இருந்தால் அந்த நெற்பயிர் அறுவடைக்கு வந்து இருக்கும் அல்லது அரசாங்கமே அதை அறுவடை செய்து வேறு யாருக்காவது கொடுத்து இருந்தால் கூட மனது ஆறியிருக்கும் என கூறி கதறி அழுத விவசாயி தற்போது பயிரிட்ட நெற்பயிர்கள் யாருக்கும் பயனில்லாமல் மண்ணோடு மண்ணாக போய்விட்டது என்றார்
பயிர்களை பயிரிட படாதபாடு படுகிறோம் எனவே இந்த பயிர்களை நாசம் செய்யாமல் உரிய கால அவகாசம் கொடுத்து பின்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அந்த விவசாயி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது தாங்கள் தரப்பு ஆறு மாதத்திற்கு முன்பே ஆக்கிரமிப்பு தொடர்பாக அவர்களிடம் அறிவிப்பை வழங்கி விட்டோம் என கூறி செல்போன் தொடர்பை துண்டித்தனர்
நிருபர் சத்தியநாராயணன்
Comments
Post a Comment