மார்க்.கம்யூ ஆர்பாட்டம்
ஆர்பாட்டம்
வேலுார்:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க். கம்யூ., கட்சி சார்பில் ஒன்றுபட்ட வேலுார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்பாட்டம் நடந்து வருகிறது.
ஆற்காடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு மற்றும் கலவையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
குடியாத்தத்தில், புவனேஸ்வரிபேட்டை, கோபாலபுரம், எம்பிகஎஸ் நகர், பிச்சனுார்பேட்டை, செதுக்கரையில் ஆர்பாட்டம் நடந்தது.
வேலுார் ஆட்டோ அரங்க கிளை சார்பில் ஓட்டேரி பஸ் நிறுத்தம் மற்றும் தொரப்பாடி ஆகிய இடங்களில் ஆர்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்துாரில் தாலுகா செயலாளர் காசி தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் ஜாபர்சாதிக், ஜோதி, சேகவன், ரவி, ரங்கன் கலந்து கொண்டனர்.
சைனகுண்டா கிளையில் கிளை செயலாளர் வெங்கடாஜலபதி தாலமையில் நடந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், தாலுகா செயலாளர் சிலம்பரசன், தாலுகா குழு உறுப்பினர் ரகுபதி கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிளை சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் அர்ஜூனன், இந்துமதி, ராஜா, முத்துராஜ், குமார், சீனிவாசன், ராமு, சரளா கலந்து கொண்டனர்.
குடியாத்தம் பிச்சனுார்பேட்டையில் நடந்த ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் வெங்கடேசன், சாரதி, வின்டல் வில்கி, குபேந்திரன், லெனின், தாமோதரன் கலந்து கொண்டனர்.
வேலுார் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில், முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
வேலுார் தெற்கு கமிட்டி சார்பில் ஒப்பாரி ஆர்பாட்டம் நடந்தது.
மேட்டிமையம்பட்டி கிளை சார்பில் பாகாயம் மற்றும் தொரப்பாடி கிளை சார்பில் எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்பாட்டம் செய்தனர்.
பேர்ணாம்பட்டு, குடியாத்தம் தெற்கு தாலுகா குழுவின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம்
டந்தது. சின்னசெட்டிகுப்பத்தில் கிளை செயலாளர் கண்ணன் தலைமையிலும், மேல் செட்டிகுப்பத்தில் தாலுகா குழு உறுப்பினர் ராம்குமார், மேல் ஆலத்துாரில் கிளை செயலாளர் சதீஷ் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. இதில், தாலுகா செயலாளர் சரவணன், மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், தாலுகா குழு உறுப்பினர் பஞ்சாட்சரம், விவசாய சங்க தலைவர்கள் நடராஜன், சுந்தரவேல் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment