ஆன்மீகம்
🙏 *இனிய காலை வணக்கம்.*
*பகவான் ராமர் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.*
*அப்போது பகவான் ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா, ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.*
*நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.*
*நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்.*
*லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது.*
*நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்.*
*லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.*
*லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன்.* *நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர்.* *அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?*
*நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும்.*
*நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.*
*ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.*
*ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல்*
*சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம்.* *அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன்.* *விளைவு அனைவருக்கும் நாசம்.*
*அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.*
*நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.*
*தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.*
*உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.*
*தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.*
*உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.*
*நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே*.
*வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே.* *அவை நம் வழிகாட்டிகள்.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.*
*லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.*
*எனக்கு எல்லாம் தெரியும்,*
*என்னால் எல்லாம் முடியும் என்ற அகந்தை, 'நான்' இவை இருந்தால் ராவணனுக்கு ஏற்பட்ட கதிதான்.*
🙏
Comments
Post a Comment