சாத்தனூர் அணை அமைச்சர் வேலு நீர்திறப்பு

சாத்தனூர்_அணை_நீர்_திறப்பு  

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே அமைந்துள்ள  சாத்தனூர் அணையின் முழு நீர் மட்டம் 119.00 அடி,  சாத்தனூர் அணையின் முழு நீர் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடியாகும்.

இன்று காலை 6.00 மணி அளவில் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 97.50 அடி, கொள்ளளவு 3399 மில்லியன் கன அடியாகும்.தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டிலிருந்து சாத்தனூர் இடதுபுறக் கால்வாயில் வினாடிக்கு 140 கன அடியும், வலதுபுறக் கால்வாயில் வினாடிக்கு 160 கன அடியும் இன்று 04.04.2022 முதல் 19.05.2022 வரை 45 நாட்களுக்கு நீரை பொதுப்பணித் துறை அமைச்சர் வேலுதிறந்து வைத்தார்.

மேலும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஏப்ரல் மாத இறுதிக்குள் விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதன் மூலம் சாத்தனூர் இடதுபுறக் கால்வாயில் 2899 ஏக்கர், சாத்தனூர் வலதுபுறக் கால்வாயில்  4644 ஏக்கர் மற்றும்  திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு 5000 ஏக்கர் ஆகியவை சேர்த்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 34கிராமங்கள், கள்ளக்குற¨ச்சி  மாவட்டத்திலுள்ள 57கிராமங்கள் மற்றும்  விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 15 கிராமங்களில் உள்ள மொத்தம் 12543 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும்.

தற்போது, திறந்துவிடப்படும் நீரானது 04.04.2022 முதல் 15 நாட்களுக்கு கடைமடை ஏரிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து நீர் வழங்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயனடையுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

 நிகழ்ச்சியில் சட்ட மன்ற துணைத்தலைவர், பிச்சாண்டி எம் எல் ஏ , நாடாளுமன்ற உறுப்பினர், அண்ணாதுரை,மாவட்ட ஆட்சித் தலைவர், முருகேஷ் கலந்து கொண்டனர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்