யுகாதி காலை தரிசனம்

🚩 
*காலை தரிசனம் !* 
*யுகாதி - பெருமாள் தரிசனம் !!*

இன்று
சனிக்கிழமை !

பிலவ வருடம் : 
பங்குனி மாதம் 19 ஆம் நாள்....!

ஏப்ரல் மாதம் : 02 ஆம் தேதி : 
(02-04-2022)

சூரிய உதயம் : 
காலை : 06-23 மணி அளவில் !

சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-25 மணி அளவில் !

இன்றைய திதி : 

வளர்பிறை பிரதமை மதியம் 12-45 மணி வரை ! அதன் பிறகு துவிதியை !

இன்றைய நட்சத்திரம் : 

ரேவதி மதியம் 12-15 மணி வரை ! அதன் பிறகு அஸ்வினி...!

இன்று 
சம நோக்கு நாள் !

யோகம் : 
இன்று மதியம் 12-15 மணி வரை யோகம் நன்றாக இல்லை, பிறகு சித்தயோகம் !!

சந்திராஷ்டமம் :

இன்று
மதியம் 12-15 மணிவரை சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் !

அதன் பிறகு கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம் !!

ராகுகாலம் : 
காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!

எமகண்டம் : 
மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!

குளிகை :  
காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !!

சூலம் :  கிழக்கு !
பரிகாரம் : தயிர் !!

கரணம் : 
மதியம் 12-00 மணி முதல் 01-30 மணி வரை !

நல்ல நேரம் : 

காலை :
10-30 மணி முதல் 12-00 மணி வரை !

மாலை :
05-00 மணி முதல் 07-00 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் :

சுக்கிர ஓரை : 
காலை : 10-30 மணி முதல் 11-00 மணி வரை !!

புதன் ஓரை : 
காலை : 11-00 மணி முதல் 12-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :

இன்று
யுகாதிப் பண்டிகை !
தெலுங்குவருடப் பிறப்பு !!

இன்று
சாந்திரமான சைத்ர மாத துவக்கம் ! !!

இன்று
சைத்ர சுத்தப் பிரதமை !!

சந்திரனை மையமாக கொண்டு பஞ்சாங்கம் கணக்கிடப்படுப்பவர்கள் அனைவருக்கும் இன்று புத்தாண்டு..!

*அனைத்து தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கும் யுகாதி திருநாள் வாழ்த்துக்கள்...!!*

ஆந்திரா...
கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதிகளில் இன்று வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது..!

உகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும்..

உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய ..

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படலமாக மலர்கிறது.!!

*பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். !*
 
அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள் தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி.!!

மேஷ ராஷியில் சூரியனும் சந்திரனும் இணையும் நாளே தெலுங்கு புத்தாண்டின் துவக்க நாள் !

மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு ...

எதிர்கொள்ள வேண்டும் என்பதையே இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது..!!

யுகாதி என்றால் யுகத்தின் ஆதி (ஆரம்பம்) என்று பொருள்..! 

யுக்மம் என்ற சொல்லே யுகாதியாகியது !!

யுகாதி பண்டிகை அன்று தான்
பிரம்மா உலகத்தைப் படைத்ததாகக் கூறுவார்கள்.!

யுகாதி தினம் புதிய வேலை, கல்வி, தொழில் போன்றவற்றைத் துவங்குவதற்கு சிறந்தது !

இன்று
கரிநாள் ! 

இன்று
நாள் நட்சத்திரம் பார்க்கவேண்டிய அவசியமில்லை ! இன்றைய நாள் நல்ல நாள் !!

சந்திரமன உகாதி ...
என்றழைக்கப்படும் யுகாதி அன்று ஆறு சுவைகள் கொண்ட உணவாக யுகாதி பச்சடி செய்வார்கள்..!

வாழ்க்கையின்
தத்துவத்தை உணர்த்தும் ‌விதமாக
யுகாதி பச்சடி அமைகிறது !

கசப்புக்கு வேப்பம்பூ துவர்ப்புக்கு மாங்காய்,புளிப்புக்கு புளி பானகம் உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு 

இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள்..!

இன்று..
திருப்பதி பெருமாளுக்கு யுகாதி ஆஸ்தானம் நடத்தப்பட்டு பஞ்சாங்கம் படிக்கப்படும் !!

*பெருமாள்....*
*அருளாளே இந்த யுகாதி ஆண்டு இனிய ஆண்டாக  எல்லோருக்கும் அமையட்டும் !!*

*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!* 

*ஆத்மார்த்தம்..!*

*தேசியம்..!*

*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*

*அன்புடன் செல்வராஜ்.*🚩🚩

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்