விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்
11 பேர் பலியானவர்கள்
குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம்
அமைச்சர் வேலு வழங்கினார்
திருப்பத்துார்:
திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாதுமலை, சேப்பரை கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு, செல்லிவாசல், மதுரா புலியூரை சேர்ந்த, 30 க்கும் மேற்பட்டோர் ம ேஹந்திரா பொலிரோ வேனில் சாமி கும்பிட சென்றனர். வேன், 50 அடி பள்ளத்தில் உருண்டதில், புலியூரை சேர்ந்த, 11 பெண்கள் பலியாகினர்.
இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா, 2 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இறந்த 11 பேர் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் ரூபாயை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு இன்று புலியூருக்கு சென்று வழங்கினார்.
திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார். மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, திருவண்ணாமலை தி.மு.க., எம்.பி., அண்ணாதுரை, தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் திருப்பத்துார் நல்லதம்பி, ஜோலார்பேட்டை தேவராஜி, ஆம்பூர் வில்வநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகுமார் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment