மீண்டும் மாநில செயலாளராக பாலகிருஷ்ணன் தேர்வு
மார்க்.கம்யூ மாநில செயலாளராக மீண்டும் கே.பாலகிருஷ்ணன் தேர்வு
மதுரை :
மார்க் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு மதுரையில் கடந்த 3 நாட்களாக நடந்தது.
இதில் அக்கட்சியின் மாநில செயலாளராக இரண்டாவது முறையாக கே. பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் 80 பேர் மாநிலக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்,
தேர்வுசெய்யப்பட்ட மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராட முடிவு செய்துள்ளோம். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மார்க் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 4ம்தேதி தமிழகத்தில் 500 இடங்களில் போராட்டம் நடைபெறும். நீர்நிலை பொறம்போக்கு நிறங்களில் குடியிருக்கும் மக்களை தமிழக அரசு அப்புறப்படுத்த கூடாது.
கோவில் நிலங்கள் கடைகள் வாழ்க்கையை உயர்த்த கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மே 6-ஆம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
தற்போதைய கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.மீண்டும் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணன் வாழ்த்து தெரிவித்தார்.
Comments
Post a Comment