பெட்ரோல், டீசல்,கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்.கம்யூ ஆர்ப்பாட்டம்

மார்க். கம்யூ சார்பில்
அலமேலுரங்காபுரத்தில்
ஆர்பாட்டம்

வேலுார்:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்., கம்யூ கட்சி சார்பில் வேலுார் அலமேலுரங்காபுரம் கிளை சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் கன்னியப்பன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணன் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் நாகேந்திரன், பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் நகரம்
மார்க். கம்யூ சார்பில்
ஆர்பாட்டம்

குடியாத்தம்:
ஒன்றிய அரசின் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும் மார்க்., கம்யூ கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் நகரம், கோபாலபுரம் கிளையில் ஆர்பாட்டம் இன்று நடந்தது. கிளை செயலாளர் கோபி தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் குபேந்திரன், நகர குழு உறுப்பினர்கள் பாபு, மகாதேவன், லெனின், வாசுதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தெற்கு தாலுகா
மார்க். கம்யூ சார்பில்
ஆர்பாட்டம்

குடியாத்தம்:
ஒன்றிய அரசின் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும் மார்க்., கம்யூ கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் தெற்கு தாலுகா குழு சார்பில் இன்று ஆர்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் நடராஜன், சுந்தரவேலு, ஆறுமுகம், அர்ஜூனன், சிறுவேலு, பஞ்சாட்சரம், ராஜகோபால், சிவாஜி, அர்ஜூனன், லோகன், ராம்குமார், தரணி, கலா கலந்து கொண்டனர்.

ஜோலார்பேட்டையில்
மார்க். கம்யூ சார்பில்
ஆர்பாட்டம்

ஜோலார்பேட்டை:
ஒன்றிய அரசின் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும் மார்க்., கம்யூ கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை கிளை சார்பில்  இன்று ஆர்பாட்டம் நடந்தது. நிர்வாகி காசி தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏகாம்பரம் நன்றி கூறினார்.

வலுதளம்பட்டு
மார்க். கம்யூ சார்பில்
ஆர்பாட்டம்

வேலுார்:
ஒன்றிய அரசின் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும் மார்க்., கம்யூ கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
வலுதளம்பட்டு கிளை சார்பில் இன்று ஆர்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் சிவானந்தம், ஜெயராமன் உள்பட  ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதே போல மேல் ஆலத்துார் கிராமத்திலும் மார்க். கம்யூ., கட்சி சார்பில் இன்று நடந்த ஆர்பாட்டத்தில் பலர்  கலந்து கொண்டனர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்