நாராயணி நர்சிங் கல்லூரியில் தீபம் ஏற்றும் விழா
நாராயணி நர்சிங் கல்லுாரியில்
தீபம் ஏற்றும் விழா
வேலுார்:
வேலுார் மாவட்டம், வேலுார் அடுத்த நாராயணி நர்சிங் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு தீபம் ஏற்றும் விழா நாராயணி மஹாலில் நேற்று நடந்தது.
நாராயணி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலாஜி தலைமை வகித்தார். நர்சிங் கல்லுாரி முதல்வர் சிவகாமி வரவேற்றார்.
வேலுார் சரக டிஐஜி ஆனி விஜயா கலந்து கொண்டு, நாராயணி நர்சிங் கல்லுாரியின் சிறப்புகளை விளக்கும் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டு, மாணவிகளுக்கு தீபம் ஏற்றி வைத்தார்.
அப்போது அவர் பேசியது:
கொரோனா தொற்று பரவிய காலத்தில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்ட நிலையில், செவிலியர்கள் ஆற்றிய பணி சிறப்பு மிக்கது.
அவர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளி்த்து காப்பாற்றினார்கள்.
செவிலியர்கள் சிறிய தவறு செய்தாலும், அது நோயாளிகளை பாதிக்கும்..
எனவே செவிலியர்கள் தவறு செய்யாமல் நோயாளிகளுடன் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பொறுமை, சகிப்பு தன்மை, விடா முயற்சி இருந்தால்தான், சாதனையாளர்களாக வர முடியும்.
அனைவராலும் நர்சிங் படிக்க முடியாது. உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நோயாளிகளை தொட்டுப் பார்த்து, அவர்கள் நோயை குணமடையச் செய்ய வேண்டும். அந்தளவு நோயாளிகளிடம் நீங்கள் நம்பிக்கை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் காந்திமதி, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதி மொழி வாசிக்க மாணவியர் அதனை ஏற்றனர்.
அறங்காவலர் கலையரசு, ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி, துணை பேராசிரியை சிவகாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment