வில்வ துளசி ஆன்மீகம்

*ராம நாம மகிமை...*

1.   நமக்கு நன்மை   வரவேண்டுமானால்   'ராம  நாமத்தை'         இடைவிடாமல்   கூறவேண்டும். நமது  ஒவ்வொரு  மூச்சும்    'ராம் 'ராம்'   என்றே  உட்சென்றும் ,  வெளியேறுதலும்  வேண்டும்.

2. நாம்  அறியாமல்   செய்த தவறுக்கு  ராம நாமமே  
மிகச்சிறந்த  பிராயசித்தம்.  அறிந்தே  செய்த              தவறானால்   அதற்கு வருந்துவதும் ,   தண்டனையை ஏற்பதுவும்,   பிராயசித்தமும்   ராம  நாமமே. காலால்  நடக்கும்  ஒவ்வொரு  அடியும்  'ராம் '  என்றே  நடக்கவேண்டும் .

3.  எல்லா விதமான  கஷ்டங்களுக்கும்  நிவாரணம்  'ராம  நாம  ஜெபமே.' கிழக்கு  நோக்கி  செல்ல  செல்ல  மேற்கிலிருந்து  விலகிடுவோம். அதுபோல  ராம  நாமாவில்  கரைய  கரைய  துக்கத்திலிருந்து  விலகிசெல்கிறோம்.

4. ' ராம  நாம'  ஜெபத்திற்கு  குரு கிடைக்கவேண்டும்  என்று  கால  தாமதம்  செய்தல்  கூடாது. ஏனெனில் 'ராம  நாமமே '  தன்னுள்  குருவையும்   கொண்டுள்ளது . நாமமே  பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில்  விழிப்பு  வந்தவுடனே  சொல்லவேண்டியது   'ராம நாமம்.'  எழுந்து  கடமைகளை  செய்யும்போதும்  சொல்லவேண்டியதும்  'ராம நாமம்.' அந்த  நாள்  நமக்கு  'ராம  நாம'  நாளாக  இருக்கவேண்டும்.

6. ' ராம நாம '  ஜெபத்தில்  நாம்  இருந்தால் , நமது  கர்ம வினையின்படி  ஏதேனும்  துக்கமோ , அவமானமோ  நிகழவேண்டியதாயின்  அவைகள்  தடுக்கப்படும் அல்லது  நமக்கு  அது பாதிப்பு  இன்றி   மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை  தாங்கும்  வலிமையையும், அதுவும்  பிரசாதமாக  ஏற்கும்  பக்குவமும்  வரும்,

7. எந்த  இடத்திலும்,  எந்த  நிலையிலும்  'ராம  நாமா'    சொல்லலாம்.  எங்கும்  உணவு  உண்ணுமுன்  'ராம  நாமா'  சொல்லிசாப்பிடலாம். இறைவனும்  அவனது   நாமாவும்  ஒன்றே!

  
8.  'ராம  நாமா'  எழுத  மனம், உடம்பு, கைகள்           ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால்  'ராம  நாமா'  சொல்ல   மனம்  மட்டும்  போதும்.

இதைதான்  "நா  உண்டு,  நாமா  உண்டு"   என்றனர்  பெரியோர்கள் .

9. ஒரு  வீட்டில் உள்ள பெண்  'ராம  நாமா'    சொன்னால்  அந்த  பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள்  அனைவரும்  பிறப்பு, இறப்பு  சக்கரத்திலிருந்து  விடுபடுவார்கள். அந்த  வீட்டினில்  தெய்வீகம்  நிறைந்துவிடும். அதுவே  கோவிலாகும் .

10. எல்லாவித  சாஸ்திர  அறிவும்  'ராம  நாமாவில்  அடங்கும்.  எல்லாவித  நோய்களுக்கும்  'ராம  நாமா' சிறந்த  மருந்து, துன்பங்களுக்கும்  அதுவே  முடிவு .

11. நமது  இலட்சியம்  அழியா  ஆனந்தமே. அது  'ராம  நாம ஜெபத்தால்  பெற  முடியும். 'ராம  நாமாவினால்   வினைகள்  எரிந்து,  எரிந்து  நோய்கள்  குறையும். சஞ்சிதம்,  ஆகாமியம்  கருகி  ப்ராரப்தம்  சுகமாக  அனுபவித்து  ஜீரணிக்கபடும்.

12. நமது  பயணத்தில்  பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ  செல்லும்போதும்  'ராம  நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள்  தவிர்க்கப்படும்.

காசி  விஸ்வநாதர்  கோவிலில்  மாலை வழிபாட்டின்  போது ( சப்தரிஷி   பூஜையின்  போது )  
ஒவ்வொரு  நாளும், வில்வ  தளங்களில் சந்தனத்தால்  ராம நாமம்  எழுதி,   அவற்றை விஸ்வநாதருக்கு   சமர்ப்பிக்கிறார்கள்.

13. பெண்களின்  மாதாந்திர  நாட்களிலும்  'ராம  நாமா' சொல்லுவதன்  மூலம்   அந்த  பிரபஞ்ச சக்தியிடமே  அடைக்கலமாகிறோம்.'ராம  நாமா'  சொல்ல  எந்த  ஒரு  விதியும்  இல்லை.  மனமிருந்தால்  மார்க்கமுண்டு.

பெண்கள்  சமைக்கும்பொழுது  ராம நாமம்   சொல்லி சமைத்தால்,   அந்த  உணவே  ராம  பிரசாதமாகி ......அதை   உண்பவருக்கு  தூய  குணங்களையும் ,  நோயற்ற   தன்மையையும்  அவர்களது  உடல்  ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள்  இருப்பின்  குணமாகும்.

14. வேதங்களின்  படி  ஒருவன்  புண்ணிய நதிகளில்  நீராடி  பின்பு  வேதம்  கற்று,  பூஜைகளை  நியதிப்படி  செய்தவனாய்,  யோகியாய்  முந்தய  ஜன்மங்களில்  வாழ்ந்தவனாக  இருந்தால், சுமார்  40,00,000 பிறவிகளை  கடந்தவனாக  இருந்தால்  மட்டுமே  அவனால்   'ராம  நாமா' வை    ஒரு முறை  சொல்லமுடியும்.

15. 'ராம  நாமாவை  உரக்க  சொல்லுங்கள்.   காற்றில்  
ராம  நாம  அதிர்வு    பரவி,   உங்களை  சுற்றிலும்   காற்றில்  ஒரு தூய்மையை   ஏற்படுத்தும். கேட்கும்  மற்றவருக்குள்ளும்   அந்த   தூய அதிர்வு  ஊடுருவி   தூய்மை  மற்றும்  அமைதியை  கேட்பவருக்கும்    தரும்.

சுற்றியுள்ள  மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள்   எல்லாம்   'ராம நாமா'  கேட்டு  கேட்டு ..... அவைகளும்  மிக  உயர்ந்த  பிறவிகளை  பெறலாம்.  இதுவும்  சேவையே!  ..... யார்  அறிவர்?  நமது  முந்தய  பிறவிகளில்  நாமும்  'ராம  நாமா'  கேட்டு  கேட்டு  இப்போதைய  பிறவியினை  பெற  ஏதேனும்  ஒரு பக்தரின்  வீட்டருகில்  மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய்  இருந்தோமோ ! என்னவோ ........  அப்புண்ணிய  பலனை ..... ராமனே  அறிவான்.

*வெற்றியை நல்கும் ஸ்லோகம்*

ஸ்ரீராம ராம ராமேதீ ராமே  
ராமே மனோரமே  
சகஸ்ர நாம தத்துலயம்  
ராம நாம வரானனே...
[02/04, 7:09 pm] +91 96775 72395: ********ஸ்ரீராமநவமி********

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராமசந்த்ரபாலயமாம்.                                           ஓம் தசரதாய வித்மஹே சீதா வல்லபாய தீமஹி தந்நோ ராம ப்ரசோதயாத்
[03/04, 5:30 am] +91 96775 72395: ஸ்ரீ ராமநவமி ஸ்பெஷல் !

16 வார்த்தை ராமாயணம்
******************************
"பிறந்தார் 
வளர்ந்தார் 
கற்றார் 
பெற்றார்
மணந்தார் 
சிறந்தார் 
துறந்தார் 
நெகிழ்ந்தார்
இழந்தார் 
அலைந்தார் 
அழித்தார் 
செழித்தார்
துறந்தார் 
துவண்டார் 
ஆண்டார் 
மீண்டார்"

🙏🇮🇳
விளக்கம்:
************
1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.

4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.

6.சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

7.துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

8. நெகிழ்ந்தார்: 
*அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
*குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
*பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.

*பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
*அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.

*சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
*விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
*எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

9.இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.

10.அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.

11.அழித்தார்:  இலங்கையை அழித்தது.

12.செழித்தார்:
*சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
*ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.

13.துறந்தார்:
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.

13.துவண்டார்:
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

15.ஆண்டார்:
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.

16.மீண்டார்:
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது".

ஜெய் ஸ்ரீராம்.

********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்********

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்